நடிகை அபிராமி, கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்தவர். தமிழில், வானவில் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பல ஆண்டுகளாக அவரை தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. இந்நிலையில், மாதவன் நடித்த மாறா என்ற படத்தில், சில காட்சிகளில் தோன்றினார்.
நடிக்க வந்த புதிதில், ஸ்லிம் ஆக காட்சியளித்த அபிராமி, மாறா படத்தில் நடுத்தர வயது பெண்மணியாக, குண்டான தோற்றத்தில் காணப்பட்டால், ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனாலும், நல்ல நடிப்பாற்றல் கொண்ட அவர், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பாரா, என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.
இந்நிலையில், நடிகை அபிராமி மகாராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் 50வது படமாக இது வெளிவருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய டைரக்டர் நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன், நட்டி, முனீஸ்காந்த், சிங்கம்புலி, தேனப்பன் ஆகியோருடன் பாரதிராஜாவும் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால், அதிக எதிர்பார்ப்புகளை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது.
மகாராஜா படத்தின், பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய நடிகை அபிராமி, இந்த படத்தின் கதை என்னவென்றே எனக்கு தெரியாது. படத்தின் போஸ்டரை பார்த்து, நானாக சில கதைகளை கற்பனை செய்துக்கொண்டு இருக்கிறேன். கமல் சார், கண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு அடுத்தபடியாக, விஜய்சேதுபதியின் தீவிரமான கண்களை நான் மிக ரசிப்பேன். அவரது கண்களை பார்த்தால், அய்யோ நான் அப்படியே மெய் மறந்து போய் விடுவேன் என்று கூறியிருக்கிறார்.
வழக்கமாக, நடிகைகளை பார்த்து தான், நடிகர்கள் அதிகமாக ரசிப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், இப்படி வெளிப்படையாக அபிராமி, விஜய் சேதுபதியை கண்களை, வர்ணித்து ரசித்து கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரது இந்த வெளிப்படையான பேச்சை, விஜய் சேதுபதி ரசிகர்கள் பாராட்டி, வருகின்றனர்.





