- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ஏன் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறேன்? நடிகை தமன்னா சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

நான் ஏன் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறேன்? நடிகை தமன்னா சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

- Advertisement -

நடிகை தமன்னா தமிழில் வியாபாரி என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் தமன்னா நடித்தார். அதில் கல்லூரி பையா தோழா சுறா படிக்காதவன் வேங்கை என அவர் நடித்த பல பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை வெற்றியை பெற்றன.

எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை தமன்னா வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குறிப்பாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் சோபனா என்ற கல்லூரி மாணவி கேரக்டரில் அவரது நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது.

- Advertisement -

தமிழில் பல படங்களில் நடித்த தமன்னா பிறகு தெலுங்கு படங்களிலும் நடித்தார். அதன்பிறகு இந்தியிலும் நடிகை தமன்னா வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்தியில் எல்லை தாண்டிய கவர்ச்சியில் படுக்கையறை காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் அவரது நடித்தது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே இந்தி நடிகர் விஜய் வர்மா என்பவருடன் நெருக்கமான நட்பில் இருந்த நடிகை தமன்னா இப்போது அவரை விட்டு பிரிந்து விட்டார். அவர்களது காதல் பிரேக்கப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்த தமன்னா தற்போது மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

- Advertisement -

படங்களில் நடிப்பது மட்டுமின்றி பெரிய ஹீரோக்களின் படங்களில் அடிக்கடி கவர்ச்சி குத்தாட்டமும் தமன்னா போட்டு வருகிறார். ஜெயிலர் படத்தில் அவரது காவலய்யா குத்தாட்டத்தை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. சமீபத்தில் இதுகுறித்து நடிகை தமன்னா கூறியதாவது, திடீரென நான் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறேன். பிறகு அப்படி நடிக்க மறுக்கிறேன்.

ஏன் இப்படி என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சிலர் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான். ஏனென்றால் என்னாலேயே என்னை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்களால் எப்படி என்னை புரிந்துக் கொள்ள முடியும் என்று நடிகை தமன்னா ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்