தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக பாடகராக பன்முக தன்மை கொண்டு விளங்குபவர் நடிகர் தனுஷ். கடந்தாண்டில் அவர் இயக்கிய நடித்த ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 100 கோடி வசூலித்த பிளாக்பஸ்டர் படமாக இருந்தது. இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வருகிற 20ம் தேதி குபேரா படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வித்யாசமான ஹேர்ஸ்டைலில் வந்திருந்த தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ், என்னை பற்றிய வதந்திகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது என பேசியிருந்தார்.
அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் இட்லி கடை என்ற படம் உருவாகி வருகிறது. அதே போல் இந்தியில் தனுஷ் நடிப்பில் தேரே இஸ்க் மெயின் என்ற படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுதவிர ராஜ்குமார் பெரியசாமி தமிழரசன் பச்சமுத்து எச் வினோத் ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இளையராஜா பயோபிக் படம், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயோபிக் படங்களிலும் நடிக்க உள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். வேலையில்லா பட்டதாரி வேலையில்லா பட்டதாரி 2 படங்களில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அமலாபால் கூறியதாவது, வேலையில்லா பட்டதாரி படத்தில் நான் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தேன்.
அப்போது கேரவனில் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம். தனுஷ் பார்க்க தான் ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். ஆனால் சாப்பாடு விஷயத்தில் எல்லாம் அவர் தாராளமாக சாப்பிடுவார். ருசியான உணவுகளை நிறைய விரும்பி சாப்பிடுவார். அவர் சுத்த சைவம். ஆனால் முட்டை மட்டும் ஆசைப்பட்டு சாப்பிடுவார். சிக்கன் மட்டன் மீன் இதெல்லாம் சாப்பிட மாட்டார்.
தற்போது சாப்பிடும்போது பலரும் செல்போன் அல்லது டிவியில் படம் வெப் சீரிஸ் காமெடி காட்சிகள் என எதையாவது பார்த்துக் கொண்டே சாப்பிடுவார்கள். அதுதான் வழக்கம். அது போல் நடிகர் தனுஷூக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. தனுஷ் சாப்பிடும்போது கவுண்டமணியின் காமெடி காட்சிகளை கேரவனில் இருக்கும் டிவியில் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டே தான் சாப்பிடுவார். கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர் தனுஷ் என்று நடிகை அமலா பால் கூறியிருக்கிறார்.





