தமிழ் சினிமாவில் ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை, அங்கீகாரத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. அடுத்து எங்கேயும் எப்போதும் படத்தில் வேற லெவலில், நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அஞ்சலி.
தொடர்ந்து சில படங்களில் நடித்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் இருந்தார். இருவரும் நெருக்கமான காதலில் இருந்ததால், பட வாய்ப்புகளை இழந்தனர். தமிழில் நடித்தாலும், முன்னணி நடிகர்களுடன் நடிக்காமல் 2ம் நிலை ஹீரோக்களுடன் நடித்து வந்த அஞ்சலி பிறகு தெலுங்கு பக்கம் சென்றார்.
தெலுங்கு சினிமாவை பொருத்த வரை கவர்ச்சியில் தாராளம் காட்டினால், தொடர்ந்து தாக்கு பிடிக்கலாம் என்ற நிலையில் அஞ்சலி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் படத்தில் நடித்த அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவும் கலந்துக்கொண்டார். மேடையேறி வந்த அவர், தன் அருகே ஒரு இளம் நடிகை நின்றிருந்த நிலையில், அவருக்கு அருகில் நின்றிருந்த நடிகை அஞ்சலியை திடீரென தோளை பிடித்து வேகமாக தள்ளினார். அவரது இந்த திடீர் நடவடிக்கையால் அஞ்சலி அதிர்ச்சியானாலும், பிறகு பெரிய காமெடியை அவர் செய்தது போல பெரிதாக சிரித்து சமாளித்தார். அந்த வீடியோ, வைரலானது.
இதுகுறித்து பலரும் நடிகர் பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல், இதற்கு எதிர்ப்போ சின்ன முறைப்போ காட்டாமல் அஞ்சலி சிரித்தது, மிக அசிங்கமான செயல். அப்போதே அவர் அந்த மேடையில் இருந்து இறங்கி சென்றிருக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு பதில் தரும் விதமாக நடிகை அஞ்சலி தனது எக்ஸ் பதிவில், கேங்ஸ் ஆப் கோதாவரி விழாவுக்கு வந்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எனக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் ஒரு பரஸ்பர மரியாதையும், நட்பும் இருக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக, நல்ல நட்புடன் இருந்து வருகிறோம். அவருடன் மேடையில் இருந்தது, அற்புதமான நிகழ்வாக இருந்தது, என்று குறிப்பிட்டுள்ளார்.





