- Advertisement -
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் படம் மூலம் அறிமுகமான அன்னா ரேஷ்மா ராஜன் அதில் வரும் ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இவர் ஜெயிலர் 2 படத்தில் வில்லன் சுராஜ் வெஞ்சரமூடு மனைவியாக நடித்திருந்தார். ஓரிரு காட்சிகளில் மட்டுமே இவர் வருகிறார். பெரியதாக வசனமோ நடிப்போ இவருக்கு இல்லை. அதே நேரத்தில் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் பூர்ணா குறிப்பாக காந்தா கேரக்டரில் நடித்த வித்யாபாலன் உள்ளிட்டோர் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளனர். ஜெயிலர் 2 படத்தில் தனக்கு மட்டும் இப்படி முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டதே என்று அன்னா ரேஷ்மா ராஜன் கடும் வருத்தத்தில் இருந்து வருகிறார்.





