- Advertisement -
Homeபொழுதுபோக்குரம்பா உள்பட பல நடிகைகளுடன் நான் நடிச்சிருக்கேன், என்னுடன் நடித்த அவங்க கேரக்டர் எல்லாம் இதுதான்...

ரம்பா உள்பட பல நடிகைகளுடன் நான் நடிச்சிருக்கேன், என்னுடன் நடித்த அவங்க கேரக்டர் எல்லாம் இதுதான் – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த நடிகை தேவயானி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் மிகவும் கவனம் பெற்ற முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. காதல் கோட்டை படத்தில் கமலி கேரக்டரில் நடித்த அவர், அதன்பிறகு முன்னணி நட்சத்திர நடிகையாக மாறி பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படங்களும் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.

காதல் கோட்டை படம் தேவயானிக்கு மட்டுமின்றி நடிகர் அஜீத்குமார் நடிகர் கரண் நடிகர் தலைவாசல் விஜய் போன்றவர்களுக்கும் அது மிக முக்கியமான ஒரு திருப்புமுனை படமாக இருந்தது. இதில் ஹீரா நடிப்பும் அதிக கவனம் பெற்றது. இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் இந்த படம் வெளியான போது ஒலிக்காத வீடுகள் இல்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை தவிர கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் விஜய் அஜீத்குமார் சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் எல்லாம் தேவயானி நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் தேவயானி நிறைய படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

நடிகை தேவயானி நினைத்தேன் வந்தாய் படத்தில் ரம்பாவுடனும், தெனாலி படத்தில் ஜோதிகா மற்றும் மீனாவுடன், சூரியவம்சம் படத்தில் நடிகை பிரியாராமனுடன் பாட்டாளி படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் நடித்திருந்தார். அதே போல் ரோஜாவுடனும் ராஜகாளியம்மன் என்ற படத்தில் தேவயானி நடித்திருந்தார்.

- Advertisement -

வழக்கமாக இரண்டு மூன்று ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது சாதாரணமான விஷயம். ஆனால் சமகால மார்க்கெட் உள்ள நடிகைகள் இப்படி ஒரே படத்தில் இரட்டை நாயகிகளாக நடிக்கும்போது எப்படியும் ஈகோ பிரச்னை ஏற்பட்டு நடிகைகளுக்குள் மோதல் உருவாகும். ஆனால் தேவயானி பல படங்களில் இப்படி மற்ற நாயகிகளுடன் சேர்ந்து நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை தேவயானி கூறியதாவது, எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட் என்றால் அது ரம்பா தான். நான் பல நடிகைகளுடன் சேர்ந்து நடிச்சிருக்கேன். ரம்பா ரம்யா கிருஷ்ணன் மீனா ஜோதிகா ரோஜா கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். எல்லாரும் கூடவும் சேர்ந்து நடிச்சிருக்கேன். அவங்க எல்லாருமே ரொம்ப ஸ்வீட். எல்லோருமே ரொம்ப ஸ்வீட்டா புரபஷனல்லா என் கூட இருந்தாங்க, அன்பா நட்பா என்கூட பழகினாங்க என்று தேவயானி அவர்களை பாராட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்