மலையாள சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அசத்திக் கொண்டு இருப்பவர் நடிகர் பிருத்விராஜ். தமிழில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமான அவர் மொழி அபியும் நானும் கண்ணாமூச்சி ஏனடா ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆடுஜீவிதம் படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.
கடந்த 2019ம் ஆண்டில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் லூசிபர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. லூசிபர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது லூசிபர் 2ம் பாகத்திற்கு எல் 2 எம்பிரான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் என்பவருடன் இணைந்து லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குனர் பிருத்விராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். மேலும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். எம்புரான் படம் வருகிற 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மலையாளம் தமிழ் இந்தி தெலுங்கு மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக எம்புரான் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
எம்புரான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பிரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் எம்புரான் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் பிருத்விராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்த படத்தின் பட்ஜெட்டை அறிவிக்கவே இல்லை. நீங்கள் இந்த படத்தைப் பார்க்கும்போது பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அதுதான் இந்த படத்தின் பட்ஜெட். ஆனால் நீங்கள் நினைப்பதை விட நிச்சயம் அதிகமாகவே இருக்கும். இதுதான் மலையாள சினிமா.
எங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை படத்தின் தயாரிப்பிற்காக செலவிட்டோம். சம்பளமாக மட்டுமே 80 கோடி ரூபாய் செலவழித்த படம் அல்ல இது. ஆனால் தயாரிப்பிற்காக 20 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்ட படம் என்றும் இயக்குனர் பிருத்விராஜ் கூறி இருக்கிறார். இந்த படத்தில் பிருத்விராஜ், மோகன்லால் இருவருமே சம்பளமின்றி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.





