- Advertisement -
Homeபொழுதுபோக்குபரதநாட்டிய பள்ளியை மூடச் சொன்ன கணவர், தனது அதிரடி முடிவால் கின்னஸ் சாதனை படைத்த...

பரதநாட்டிய பள்ளியை மூடச் சொன்ன கணவர், தனது அதிரடி முடிவால் கின்னஸ் சாதனை படைத்த பிரபல நடிகை!

- Advertisement -

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வது வழக்கம். அந்த பெண் அந்த ஆணின் தாயாக இருக்கலாம். அல்லது மனைவியாக இருக்கலாம். அவரது மகள் அல்லது சகோதரியாக கூட இருக்கலாம். ஏனென்றால் ஆணுக்கு ஒரு பெண்ணின் ஆதரவு பெரிய பக்கபலமாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஒரு சில ஆண்கள் பெண்களின் வளர்ச்சிக்கு மாபெரும் தடையாக இருந்து விடுகின்றனர். கணவராக தந்தையாக சகோதரனாக மகனாக ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு உதவாமல் முட்டுக்கட்டை போட்டு அவர்களது திறமை வெளியுலகத்துக்கு தெரியாமல் மக்கிப் போக செய்து விடுகின்றனர்.

- Advertisement -

கடந்த 2001ம் ஆண்டில் நடிகர் சத்யராஜ் நடித்த ஆண்டான் அடிமை என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை திவ்யா உன்னி. மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான அவர் தமிழ் சினிமாவில் ஆண்டான் அடிமை படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

தொடர்ந்து வேதம் சபாஷ் பாளையத்து அம்மன் கண்ணன் வருவான் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பரதநாட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பரதநாட்டியம் குச்சிப்புடி மோகினி ஆட்டம் என பலவிதமான கலைகளை கற்றவர்.இவர் வெளிநாட்டில் சொந்தமாக நாட்டிய பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த நாட்டிய பள்ளியை மூடிவிட்டு வீட்டோடு மனைவியாக மட்டும் இரு என்று திவ்யா உன்னியின் கணவர் கட்டுப்பாடு விதித்துள்ளார். இப்படி அவர் சொன்னதால் அவரை திவ்யா உன்னி விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். எனினும் தனது கலைக்கு தடையாக கணவர் இருந்ததால் அவரை விட்டு விலகினார்.

முதல் கணவர் விவாகரத்துக்கு பின்னர் மிக விரைவிலேயே அவர் 2வது திருமணமும் செய்து கொண்டார். கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் திவ்யா உன்னி தலைமையில் சுமார் 11, 600 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடனம் ஆடினர். இது மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்ச்சி என்ற பிரிவில், முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்தது.

- Advertisement -

சற்று முன்