- Advertisement -
Homeபொழுதுபோக்குமகுடம் படத்தில் இப்படியும் ஒரு பிரச்னையா? இயக்குனர் விஷால் மீது கடுப்பான நடிகை துஷாரா விஜயன்!

மகுடம் படத்தில் இப்படியும் ஒரு பிரச்னையா? இயக்குனர் விஷால் மீது கடுப்பான நடிகை துஷாரா விஜயன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக செல்லமே திமிரு தாமிரபரணி சண்டக்கோழி சிவப்பதிகாரம் பூஜை அவன் இவன் துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் விஷால் நடித்திருக்கிறார்.

இப்போது நடிகர் விஷால் இயக்குனராகவும் மாறி இருக்கிறார். மகுடம் என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடித்து படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசுக்கும் படத்தின் நாயகன் விஷாலுக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ரவி அரசு மகுடம் படத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

அதன் பிறகு மகுடம் படத்தை நடிகர் விஷால் இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மகுடம் படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் விஷால் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். மகுடம் என்ற பெயரில் ஏற்கனவே நடிகர் சத்யராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் இப்போது இயக்குனராக மகுடம் படத்தை எடுத்துள்ளார். மகுடம் படத்தில் நாயகனாக நடித்து வரும் விஷால் இந்த படத்தை முதன்முறையாக இயக்கவும் செய்கிறார். இதன்பிறகு துப்பறிவாளன் 2 படத்தையும் அவர் இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மகுடம் படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாக உள்ளார். ராயன் வேட்டையன் வீர தீர சூரன் 2 உள்ளிட்ட படங்களில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் மகுடம் படத்தில் துஷாரா விஜயன் மட்டுமின்றி நடிகை அஞ்சலியும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். அதுதான் தற்போது பஞ்சாயத்தாக மாறியுள்ளது.

மகுடம் படத்தில் நடிகை அஞ்சலியை ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு தன்னை டம்மியாக்கி விட்டதாக இயக்குனர் விஷால் மீது நடிகை துஷாரா விஜயன் கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 2 நடிகைகள் ஒரு படத்தில் நடித்தால் எப்பவும் இந்த ஈகோ பிரச்னைதானா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்