- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் நாகர்ஜூனா என்னிடம் மன்னிப்பு கேட்டார் - விஜய் பட நடிகை கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

நடிகர் நாகர்ஜூனா என்னிடம் மன்னிப்பு கேட்டார் – விஜய் பட நடிகை கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் நாகர்ஜூனா. தமிழிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் தோழா குபேரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் வெளிவர உள்ள கூலி படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் கொடி கட்டிப் பறந்த நடிகை அமலாவை தான், நடிகர் நாகர்ஜூனா 2வது திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவரது முதல் மனைவியின் மகன்தான் நடிகர் நாக சைதன்யா. இவரும் தெலுங்கில் ஒரு முன்னணி நடிகர்தான். நடிகை சமந்தாவை திருமணம் செய்து பிரிந்த அவர், இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமம் செய்திருக்கிறார்.

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் இஷா கோபிகர். இந்தியில் பல படங்களில் இஷா கோபிகர் நடித்திருக்கிறார். தமிழில் காதல் கவிதை என் சுவாசக் காற்றே நரசிம்மா அயலான் உள்ளிட்ட படங்களில் இஷா கோபிகா் நடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய நெஞ்சினிலே படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இஷா கோபிகர் நடித்திருந்தார்.

மேலும் தெலுங்கு படங்களிலும் கன்னட படங்களிலும் இஷா கோபிகர் நடித்திருக்கிறார். இன்றைய இளம்தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களுக்கு இஷா கோபிகர் அதிகமாக பரிச்சயம் என்றாலும் கடந்த 1990, 2000ம் ஆண்டுகளில் இஷா கோபிகர் பிரபலமான ஒரு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை இஷா கோபிகர், நடிகர் நாகார்ஜூனாவுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அப்போது நடிகை இஷா கோபிகர் கூறியதாவது, சந்திரலேகா படத்தில் நடிகர் நாகர்ஜூனாவுடன் நான் நடித்த போது கோபத்தை வெளிக்காட்டும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அந்த காட்சி நாங்கள் எதிர்பார்த்தபடி வரவில்லை. எனவே அந்த காட்சி உண்மையாக தோன்ற வேண்டும் என்பதற்காக என்னுடன் நடித்த நடிகர் நாகார்ஜூனாவை என்னை பலமாக ஓங்கி அறையுமாறு கேட்டுக் கொண்டேன்.

அதற்கு நாகார்ஜூனா ஆரம்பத்தில் மிகவும் தயங்கினார். வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஒரு கட்டத்தில் நடிக்க வேண்டிய சூழலில் அவர் என்னை அறைந்தார். அப்படி 14 முறை என்னை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அறைந்தார். என் கன்னத்தில் அவர் அறைந்த அடையாளங்களே தழும்புகளாக தோன்றி விட்டது. அந்த டேக் முடிந்த பிறகு நடிகர் நாகார்ஜூனா என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று அந்த நேர்காணலில் நடிகை இஷா கோபிகர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்