- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரியான கேரக்டரில் இப்ப நான் நடிச்சா நல்லா இருக்காது, விஜய் 68 படத்துல நடிக்க...

அந்த மாதிரியான கேரக்டரில் இப்ப நான் நடிச்சா நல்லா இருக்காது, விஜய் 68 படத்துல நடிக்க மறுத்த இவானா – அவர் சொல்ற காரணம் புதுசா இருக்குங்க

- Advertisement -

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடிகர் விஜய் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டு அதாவது ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

வெங்கட்பிரபு இயக்கும் படம் என்றாலே அது ஜாலியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்திலும் நிறைய நட்சத்திர பட்டாளம் இருப்பதால் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சிரிப்பும், கும்மாளமும், கலாட்டாக்களுக்கும் பஞ்சமில்லாமல் ஜாலியாக செல்கிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த், மைக் மோகன் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதில் பிரசாந்த், விஜயின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார். மைக் மோகன் முதன்முறையாக இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். அவருக்கு இந்த படத்தில், ரூ. 2 கோடி சம்பளம் எனக் கூறப்படுகிறது. இதுவரை அவர் இப்படி ஒரு அதிக சம்பளம் வாங்கியதில்லை.

இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க புதுமுக நடிகை ஒருவரை படக்குழு இப்போது தேடிக்கொண்டு இருக்கிறது. அந்த நடிகை மிக இளம் வயதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் நடித்த நடிகையாக இருந்தால் வேண்டாம், புதுமுக நடிகையாக வரவேண்டும் என்றும் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதலில் இந்த கேரக்டரில் லவ்டுடே படத்தில் நடித்த நடிகை இவானா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் படத்தில் அவரது நடிப்பு, கேரக்டர் குறித்து கேட்ட பின்பு, இந்த கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார். ஆனால் விஜய் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இவானா மறுத்தது, தேடி வந்த நல்ல சான்ஸை அவரே இழந்துவிட்டார் எனக் கூறுகின்றனர்.

ஆனால் இந்த படத்தில், இவானா ஸ்கூல் பொண்ணு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார். 15 வயது பெண்ணாக பள்ளி சீருடை அணிந்து நடித்தால், என் இமேஜே போய்விடும். இப்போதுதான் லவ்டுடே படத்தில் ஒரு இளம்பெண்ணாக, மெச்சூரிட்டியாக கேரக்டரில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறேன். இந்த கேரக்டரில் நடித்தால் என் இமேஜே காலியாகிவிடும் என, இவானா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, புதுமுக நடிகை ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

- Advertisement -

சற்று முன்