- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படத்தை பாராட்டிய நடிகை ஜோதிகா, ஆனாலும் கிடைச்ச கேப்பில் இப்படி ஒரு தற்பெருமையா?...

அமரன் படத்தை பாராட்டிய நடிகை ஜோதிகா, ஆனாலும் கிடைச்ச கேப்பில் இப்படி ஒரு தற்பெருமையா? – அவரும் பேசணுமா இல்லையா… என விஜய் பாணியில் கலாய்த்த ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. 900க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் அமரன் படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர். சமீபத்தில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமரன் படம் குறித்து பதிவு ஒன்றை நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ளார். அதில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நீங்கள் அமரன் என்ற வைரத்தை படைத்திருக்கிறீர்கள். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்ததை திரையில் பார்க்க முடிகிறது. சாய்பல்லவி என்ன ஒரு சிறந்த நடிகை, கடைசி 10 நிமிடங்களில் என் இதயத்தை உலுக்கி விட்டீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

திருமதி இந்து ரெபேக்கா வர்கீஸ், உங்கள் தியாகமும் நேர்மறையான எண்ணமும் எங்கள் இதயங்களை தொட்டுவிட்டது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களை கொண்டாடுவதை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களைப் போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். தயவுசெய்து இந்த வைரத்தை தவற விடாதீர்கள் என ஜோதிகா அதில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், அமரன் படக் குழுவினருக்கு சல்யூட். ஜெய்பீம் படத்துக்கு பின் தமிழில் உன்னதமான திரைப்படம் அமரன் என்று அந்த பதிவின் ஆரம்பத்திலேயே ஜோதிகா குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

தமிழில் பல வெற்றிப் படங்கள் இதுவரை வந்துள்ள நிலையில், ஜெய்பீம் படத்துக்கு பின் தமிழில் உன்னதமான திரைப்படம் அமரன் என்று ஜோதிகா கூறியிருப்பது, தனது கணவர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை தனது பதிவில் முன்னிலைப்படுத்தி, தன் கணவரை பெருமையாக ஜோதிகா கூறி இருக்கிறார்.

இப்படி அமரன் படத்துடன் ஜெய்பீம் படத்தை ஒப்பிட்டு ஜோதிகா கூறியிருப்பதை, கங்குவா படம் வரும் இந்த நேரத்தில், தனது கணவர் சூர்யா பற்றி பாராட்டணுமா, இல்லையா என்று அரசியல் மாநாட்டில் விஜய் பேசிய ஸ்டைலில் ஜோதிகாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அமரன் படத்தை பாராட்டும் அதே சாக்கில், கிடைத்த கேப்பில் தனது கணவர் நடித்த ஜெய்பீம் படத்தையும் பெருமையாகி பேசியிருப்பதை பலர் கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்