எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த வாலி படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இயக்குனர் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். துருதுரு பார்வை, துள்ளலான நடனம், சிறந்த நடிப்பு திறன் கொண்ட ஜோதிகா, தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளை பெற்றார்.
காக்க காக்க குஷி பூவெல்லாம் உன்வாசம் பிரியாத வரம் வேண்டும். டும்டும்டும் திருமலை பேரழகன் சில்லுன்னு ஒரு காதல் வேட்டையாடு விளையாடு என பல படங்கள் அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. குறிப்பாக சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவை காதலித்து ஜோதிகா திருமணம் செய்துக்கொண்டார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த அவரை சூர்யாவுக்கு திருமணமே செய்துவைக்க விரும்பாத நடிகர் சிவக்குமார் ஒரு கட்டத்தில், தனது மகனின் விருப்பத்திற்காக அந்த திருமணத்துக்கு சம்மதித்தார். பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது படு பிஸியாக படங்களில், வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
சென்னையில் நடிகர் சிவக்குமார் குடும்பத்துடன் இனியும் கூட்டுக்குடும்பமாக இருந்தால் சினிமாவில் நடிக்க முடியாது, மாமனார் சிவக்குமார் மறுப்பு சொல்கிறார் தடை விதிக்கிறார் என்பதற்காகவே மும்பையில் குடும்பத்துடன் ஜோதிகா குடியேறி விட்டதாகவும் ஜோதிகா மீது ஒரு புகார் இருந்து வருகிறது. இதை ரசிகர்களும் அறிவார்கள்.
இந்நிலையில் இந்தியில் சைத்தான் ஸ்ரீகாந்த் போன்ற படங்களில் நடித்த நடிகை ஜோதிகா டப்பா கார்டெல் என்ற இந்தி வெப் தொடரில் தற்போது நடித்திருக்கிறார். ஹிதேஷ் பாட்டியா டைரக்ட் செய்திருக்கிறார். இந்த தொடரின் பிரமோசன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் சபானா ஆஷ்மியுடன் ஜோதிகா கலந்துக்கொண்டார். நிமிஷா சஜயன் ஷாலினி பாண்டேவும் இதில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் டப்பா கார்டெல் என்ற இந்த தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் ஒரு காட்சியில் நடிகை ஜோதிகா சிகரட் புகைப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். ஜோதிகாவா இப்படி என்ற விமர்சனத்துடன் இந்த புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் கூட சிகரட் பிடிக்கும் காட்சியில் நடிக்காத நடிகர் சிவக்குமாருக்கு இப்படி ஒரு மருமகளா என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.





