தமிழ் சினிமாவில் தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களின் மனங்களை வென்றவர் நடிகை ஜோதிகா. வாலி குஷி பூவெல்லாம் கேட்டுப்பார் பூவெல்லாம் உன்வாசம் தெனாலி ராஜா ராட்சசி சில்லுனு ஒரு காதல் பேரழகன் காக்க காக்க தூள் மொழி மன்மதன் என ஏராளமான படங்களில் சிறந்த நடிப்பை தந்தவர் ஜோதிகா.
குறிப்பாக பி வாசு இயக்கத்தில் ரஜினி பிரபு நடித்த சந்திரமுகி படத்தில் கங்கா கேரக்டரில் சந்திரமுகியாகவே நடிகை ஜோதிகா வாழ்ந்து காட்டியிருப்பார். அதே போல் மொழி படத்தில் வாய் பேசாத பெண்ணாக அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டை வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே நடிகர் சூர்யாவுடன் பல படங்களில் தொடர்ந்து நடித்த ஜோதிகா ஒரு கட்டத்தில் அவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இப்போதும் நடிகை ஜோதிகா படங்களில் தனது கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் நடிகர்கள் சூர்யா கார்த்தி நடிகை ஜோதிகா 3 பேரும் திரைப்பட தயாரிப்பாளர்களாகவும் தங்களது திரையுலக பங்களிப்பை செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக மும்பையில் ஜோதிகா சூர்யா குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட நிலையில் ஜோதிகா இந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா கூறியதாவது, சூர்யாவுக்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறதுன்னா அவ்வளவு இஷ்டம். ஒவ்வொரு படத்திலும் ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கணும்ன்னு அவர் ரொம்ப உறுதியாக இருப்பார். பாக்ஸ் ஆபிஸ் வசூலும் முக்கியம்தான். ஏன்னா யாரும் நஷ்டம் அடைய விரும்புவதில்லையே?
கருப்பு படம் கமர்ஷியலாக இருந்தாலும் அதுல ஒரு ஆழமான கதை இருக்கு. சூர்யா ஒரு கடவுள் கேரக்டர்ல நடித்திருக்கிறார். இது சாதாரண கமர்சியல் படம் கிடையாது. அதுக்குள்ள ஒரு ஆன்மா இருக்கு. கடைசி பத்து நிமிஷத்துல அவர் பண்ணின நடிப்பு இருக்கே? நிஜமாவே அது சூர்யாதானான்னு என்னால நம்ப முடியலே என்று நடிகை ஜோதிகா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





