- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பையில் முரட்டுத்தனமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா - அதற்குப் பின்னால் இப்படி...

மும்பையில் முரட்டுத்தனமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா – அதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவருமே தமிழ் சினிமாத் துறையில் சிறந்த கலைஞர்களாக தங்களை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்கள். குறிப்பாக பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன் உள்ளிட்ட படங்களில் ஜோதிகா – சூர்யா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த நட்சத்திர ஜோடிக்கு எப்போதுமே வரவேற்பு ஜாஸ்திதான்.

சூர்யா – ஜோதிகா ஜோடியாக நடித்த காலகட்டத்தில், அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. அதன் பிறகு சூர்யா, ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சிவக்குமார் தலைமையில், கூட்டு குடும்பமாக சென்னையில் வாழ்ந்த நிலையில், கடந்த ஆண்டில் சூர்யா – ஜோதிகா தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறினர்.

- Advertisement -

வயதான தன் பெற்றோரை கவனித்துக் கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் கருதியும், மும்பையில் குடியேறியதாக நடிகை ஜோதிகா தெரிவித்தார். ஆனால் உண்மையில் அதுவல்ல காரணம் என்பது பின்னர் தெரியவந்தது. நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகும், நடிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்.

ஆனால் அதற்கு சூர்யா ஒத்துக் கொண்டாலும் சிவக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என் வீட்டு மருமகள் சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை என்று அவர் கூறி இருக்கிறார். ஆனால், மாமனாரின் பேச்சுக்கு கட்டுப்படாத ஜோதிகா சென்னையில் சிவக்குமார் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால், கடைசி வரை இதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் திட்டமிட்டு, தன் கணவர் சூர்யாவை சமாதானப்படுத்தி, குடும்பத்தை பிரித்து மும்பையில் தன் பிள்ளைகளுடன் செட்டில் ஆகிவிட்டார்.

- Advertisement -

மும்பைக்கு சென்ற பிறகு நடிகை ஜோதிகா, உடற்பயிற்சி கூடங்களில், கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோக்கள், தொடர்ந்து வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதை பார்க்கும் ரசிகர்கள், இவர் எதற்கு இந்த அளவுக்கு வொர்க் அவுட் செய்து இவ்வளவு கஷ்டப்படுத்தி, தன்னை வருத்திக் கொள்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். அதற்காகவே இப்படி தனது உடலை கட்டுக்கோப்பாக, ஸ்லிம்மாக மாற்ற கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதாக தெரியவந்துள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களில்,நடிகை ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வைத்தாலே போதும். அந்த வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு ஒரு வேகம் ஏற்பட்டு தீவிரமாக உடற்பயிற்சி செய்வார்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்