தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். குறிப்பாக நடிகர் விஜயுடன் துப்பாக்கி ஜில்லா போன்ற படங்களில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். நான் மகான் அல்ல அழகுராஜா விவேகம் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் இந்தி நடிகையாக காஜல் அகர்வால் இருந்த போதிலும் இந்தி மொழியை காட்டிலும் தமிழ் படங்களில் தான் நடிக்க அதிகமாக விரும்புவேன் என்று கூறியிருக்கிறார். தமிழில்தான் தொழில் பக்தி மரியாதை நடிகைகளுக்கு உரிய கௌரவம் கிடைப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் பெண்களை மரியாதையாக நடத்தும் பண்பு தமிழ் சினிமாவில் அதிகமாக உள்ளது என்றும் அவர் வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.
நடிகை காஜல் அகர்வால் இப்போது தி இந்தியா ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையை கேட்டபோது அது தன்னை எந்த அளவுக்கு பாதித்தது என்று சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியபோது நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, தி இந்தியா ஸ்டோரி படத்தின் கதையைக் கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். பல நாட்கள் எனக்கு தூக்கம் இல்லாத இரவுகளாகவே அமைந்தன. எனக்கு ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.
அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த உண்மை கதையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க போகிறோம்? தனிப்பட்ட முறையில் நம் குடும்பத்தையும் நம் வாழ்க்கையையும் இதிலிருந்து எப்படி காப்பாற்ற போகிறோம்? இந்த மாதிரியான கலப்படங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? என்று என்னுடைய மனம் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது குறித்து எனக்கு முன்பே முழுமையாக தெரியாது. உணவு கலப்படம் பற்றி அரைகுறையாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் அதுகுறித்த அதிர்ச்சியான உண்மைகளை படித்தும் பார்த்தும் தெரிந்து கொண்டேன் என்று நடிகை காஜல் அகர்வால் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





