தமிழ் மற்றும் இந்தி தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் ஜில்லா துப்பாக்கி மெர்சல் பாயும்புலி நான் மகான் அல்ல கவலை வேண்டாம் ஆல்இன் ஆல் அழகு ராஜா மாற்றான் விவேகம் மாரி கோமாளி என பல படங்களில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.
மும்பையை சேர்ந்த இந்தி நடிகையாக காஜல் அகர்வால் இருந்தாலும் எப்போதும் தமிழ் சினிமா குறித்தும் தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி குறித்தும் பெருமையாக பேசுவது வழக்கம். இந்தி சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமாவில்தான் நடிகைகளுக்கு நல்ல கதாபாத்திரங்கள் தரப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நடிகைகளுக்கு தேவையான பாதுகாப்பும் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
நடிகர் விஜயுடன் ஜில்லா துப்பாக்கி மற்றும் மெர்சல் என 3 படங்களில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருக்கிறார். அத்துடன் அஜீத்குமார் கார்த்தி விஷால் ஜீவா சூர்யா ரவி மோகன் போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். குறிப்பாக சித்ரா தேவிப்பிரியா கேரக்டரில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் அவரது கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் திருமணம் செய்துக்கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலான நடிகை காஜல் அகர்வால் தாயானார். சற்று உடல் குண்டான நிலையில் மீண்டும் அவர் நடிக்க வரமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்தார்.
கடைசியாக காஜல் அகர்வால் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் மற்றும் தெலுங்கு படம் கண்ணப்பா ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த சூழலில் நடிகர் விஜய் சமீபத்தில் பங்கேற்ற கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது.
நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, விஜயுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் அவரது தீவிர ரசிகை. ஆனால் அரசியல் பேரணி குறித்து நான் என்ன பேசுவது? அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார். மேலும் என்னைப் பற்றிய நிறைய தவறான வதந்திகளும் பரவுகின்றன. அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை என்றும் நடிகை காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.





