- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படத்தை பார்த்துட்டு தாத்தா கருணாநிதி ஒரு கிப்ட் கொடுத்தார் - ஆனா அப்படி சொல்வாருன்னு...

என் படத்தை பார்த்துட்டு தாத்தா கருணாநிதி ஒரு கிப்ட் கொடுத்தார் – ஆனா அப்படி சொல்வாருன்னு நான் எதிர்பார்க்கலே – நடிகர் அருள்நிதி சொன்ன ரகசியம்!

- Advertisement -

திமுக குடும்பத்தில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி துவங்கி அடுத்து உதயநிதி மகன் இன்பன் உதயநிதி வரை அடுத்தடுத்து வந்துக்கொண்டே இருக்கின்றனர். பல படங்களில் சினிமா வசனங்களை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஓரிரு படங்களில் ஸ்டாலின் நடித்தும் இருக்கிறார். அவரது மகன் உதயநிதி 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அதே போல் உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் சினிமாவில் இயக்குனராக உள்ளார். அந்த வரிசையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதியும் இப்போது சினிமாவில் நடிக்க பயிற்சி பெற்று வருகிறார். மாரி செல்வராஜ் இயக்க உள்ள ஒரு புதிய படத்தில் இன்பன் உதயநிதி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் திமுக குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்த மற்றொரு வாரிசு நடிகர் அருள்நிதி. இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான வம்சம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருந்தார். கஞ்சா கருப்பு காமெடி ரோலில் அசத்தியிருந்தார்.

தொடர்ந்து டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 டி பிளாக் இரவுக்கு ஆயிரம் கண்கள் தேஜாவு கழுவேத்தி மூர்க்கன் டைரி ஆறாது சினம் களத்தில் சந்திப்போம் மௌனகுரு பிருந்தாவனம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ஒரு கன்னியும் நான்கு களவாணிகளும் உள்ளிட்ட பல படங்களில் அருள்நிதி நடித்திருக்கிறார் அடுத்ததாக அவர் நடித்த டிமாண்டி காலனி மூன்றாம் பாகம் படம் விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அருள்நிதி கூறியதாவது, என்னுடைய முதல் படம் வம்சம் பார்த்து விட்டு தாத்தா கருணாநிதி ஒரு கிப்ட் வாட்ச் எனக்கு கொடுத்தார். அவர் கொடுத்தது எனக்கு காம்ப்ளிமென்ட் ஆகவும் இருந்துச்சு. ஆனால் அதே நேரத்துல இனிமே இது நீ நல்லா நடிக்கிறதுக்காகன்னு சொல்லி கொடுத்துட்டார்.

நல்ல படம் பண்றேன், நல்ல ஸ்கிரிப்ட்டுல நடிக்கிறேன் என்றால் எங்க அம்மா சொல்வாங்க. அவங்க வெளியில பங்க்‌ஷனுக்கு எல்லாம் போயிட்டு வரும்போது அவங்க பிரண்ட்ஸ் ரிலேடிவ்ஸ் எல்லாம் உங்க பையன் அருள்நிதி படம் பார்க்கிறோம். நல்லா பண்றார். அருள்நிதி நடிச்ச படம் எங்களுக்கு பிடிக்கும் என்று அவங்க சொல்வதை ஒரு காம்ப்ளிமென்ட் ஆக பார்க்கறேன் என்று நடிகர் அருள்நிதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்