- Advertisement -
Homeபொழுதுபோக்குஅங்கே கடவுளும் கிடையாது… புடலங்காயும் கிடையாது… தெருத் தெருவாக அலைந்ததுதான் மிச்சம் - நடிகை கஸ்தூரி...

அங்கே கடவுளும் கிடையாது… புடலங்காயும் கிடையாது… தெருத் தெருவாக அலைந்ததுதான் மிச்சம் – நடிகை கஸ்தூரி தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் கஸ்தூரி. கடந்த 1990களில் வெளியான ராக்காயி கோயில் ஆத்தா உன் வாசலிலே உரிமை ஊசலாடுகிறது அபிராமி அமைதிப்படை இந்தியன் உடன்பிறப்பு செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இப்போதும் சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி நடித்த படங்களில் மணிவண்ணன் இயக்கத்தில் தாயம்மா கேரக்டரில் அவர் நடித்த அமைதிப்படை படம் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. இந்தியன் படத்தில் கமல்ஹாசன் மகளாக கஸ்தூரி பிளாஸ்பேக் காட்சியில் வந்தாலும் அந்த படத்தின் திரைக்கதையின் மையக் கருவே அவரது கதாபாத்திரம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசி விமர்சனங்களில் சிக்கிக் கொள்ளும் சினிமா நட்சத்திரங்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். ஆனால் இப்போது பாஜக கட்சியில் இணைந்து விட்டார். எனினும் அவ்வப்போது அரசியல் சார்ந்தும் சினிமா சார்ந்தும் சமூகம் சார்ந்தும் தனது கருத்துகளை வெளிப்படையாக கூறி வருகிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி கூறியதாவது, நான் திருமணம் ஆகி அமெரிக்கா சென்றபோது நிறைய விஷயங்களை மிஸ் செய்கிறேன். 2000ம் ஆண்டில் அமெரிக்காவில் என்னுடைய வாழ்க்கையை துவங்கினேன். அப்போது புடலங்காய் கிடைக்காமல் அமெரிக்காவில் அலைந்திருக்கிறேன்.

- Advertisement -

ஐரோப்பாவில் எல்லாமே கிடைக்கும். அதற்கு காரணம் ஈழத் தமிழர்கள். தமிழ் உணவு எல்லா இடத்திலும் பரிச்சயமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் ஒண்ணும் கிடையாது. பூசணிக்காய் புடலங்காய் கிடைக்காது. நாக்கு செத்துரும். எத்தனை நாளைக்கு கேரட்டையும் பீட்ரூட்டையுமே வைத்து சாம்பார் வைக்கிறது? அரிசிக்கும் கஷ்டப்பட்டேன்.

நம்ம உணவை அங்கே ரொம்பவும் மிஸ் பண்ணினேன். அதேபோல கடவுளையும் அமெரிக்காவில் மிஸ் பண்ணினேன். நேரம் தவறாமை அமெரிக்கர்களிடம் உள்ளது. எங்கு பார்த்தாலும் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் எல்லாவற்றுக்கும் நாம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம் என்று நடிகை கஸ்தூரி அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்