சினிமாவில் பிரபலமாகி விட்டால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்கள் அரசியலுக்கு வந்து விடுகின்றனர். இதில் கமல்ஹாசன் விஜய் விஜயகாந்த் போன்றவர்கள் சொந்தமாக அரசியல் கட்சியே துவங்கி விடுகின்றனர். ஆனால் அந்தளவுக்கு பெரிய நட்சத்திர நடிகர் நடிகைகளாக புகழ் பெறாதவர்கள், ஏதேனும் ஒரு கட்சியில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே பல திரை நட்சத்திரங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். ஆனால் கட்சியில் முழுநேர பணியாளர்களை அவர்கள் இல்லாமல் தேர்தல் நேரங்களில் மட்டுமே பிரசார மேடைகளில் தென்படுவார்கள். தங்கள் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பார்கள்.
பிரசார வாகனங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். மற்றபடி கட்சியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். திரை நட்சத்திரங்களை பொருத்த வரை மக்களை கவரும் செலிபரட்டிகளை இருப்பதால் தேர்தல் நேரங்களில் மட்டுமே அவர்களை விளம்பரம் போல அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது.
அந்த வரிசையில் பல துணை நடிகர்கள் அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை குஷ்பு ஆரம்பத்தில் திமுகவில் இணைந்தார். பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். அந்த 2 கட்சிகளிலுமே அவருக்கு பெரிய ஆதரவு இல்லை. திமுகவில் கனிமொழியும் காங்கிரஸ்சில் நக்மாவும் அவருக்கு போட்டியாக இருந்ததால் வெளியேறியதாக அப்போது கூறப்பட்டது.
அதன்பிறகு இப்போது 4 ஆண்டுகளாக பாஜகவில் குஷ்பு இருந்து வருகிறார். முதலில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்த குஷ்பு, சில வாரங்களுக்கு முன்பு பாஜக மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இப்போது நடிகை கஸ்தூரி, பாஜகவில் இணைந்திருக்கிறார்.
ஆத்தா உன் கோவிலிலே ராக்காயி கோயில் இந்தியன் சின்னவர் அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஆர்வலராக பல சமூக கருத்துகளை வெளிப்படுத்தி வந்த நடிகை கஸ்தூரி, சுதந்திர தினமான இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார்.





