- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, மிலன் நகரத்திலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தோம். அப்போது என் கணவர் ஆண்டனி பக்கத்தில் இருக்கும் போது போதையில் இருந்த ஒரு நபர் என்னிடம் வந்து செஃல்பி கேட்டு அடம்பிடித்தார். இப்போது வேண்டாம் பிறகு பார்க்கலாம் என்று நான் மறுத்தும் அவர் என்னை கட்டாயப்படுத்தினார். இதனால் அவரிடம் நான் சத்தமாக முடியாது என்று சொல்லி திட்டினேன். இதனால் அருகில் இருந்த என்னுடைய கணவர் முதல் முறையாக கோபப்பட்டு சத்தமிட்டார். இது ஒரு கசப்பான அனுபவம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.





