- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா? ஏன் சினிமா மீது மட்டும் பழி போடுகிறீர்கள்?...

சினிமாவை தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா? ஏன் சினிமா மீது மட்டும் பழி போடுகிறீர்கள்? – ஆவேசப்பட்ட பிரபல நடிகை குஷ்பூ

- Advertisement -

இந்திய சினிமாவில், மலையாள திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது. ஹீரோயிசம் இல்லாத யதார்த்த படங்களை தரும் இயக்குனர்களும், கதை ஆசிரியர்களும் அங்கு நிறைய உள்ளனர். உணர்வுபூர்வமான பல படங்களை தந்து ரசிகர்களை வென்றிருக்கிறது மலையாள சினிமா.

நடப்பாண்டில் கூட மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, பிரமயுகம், ஆவேசம் என மலையாள படங்கள், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும், வசூலையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது பெண் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த மலையாள சினிமா துறை என்ற அவப் பெயரை பெற்றிருக்கிறது.

- Advertisement -

ஹேமா கமிட்டி விசாரணை வெளியிட்ட அறிக்கையை அடுத்து பெண்கள் பலரும் தங்களுக்கு மலையாள சினிமா துறையில் சில இயக்குனர்கள், நடிகர்களால் ஏற்பட்ட பாலியல் அழுத்தங்கள் குறித்து வெளிப்படையாக புகார் சொல்லி வருகின்றனர். இந்த விவகாரத்தில் 20 பேர் மீது இதுவரை போலீஸ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அண்டை மாநிலமான மலையாள சினிமா துறையில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் விவகாரம், தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் சினிமா துறையிலும் பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக சீனியர் நடிகைகள் குஷ்பூ, ஊர்வசி, ராதிகா போன்றவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை குஷ்பூ கூறுகையில், எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது. ஏன் சினிமா மீது மட்டும் பழி போடுகிறீர்கள். ஏன் அதை பற்றி மட்டும் மற்றவர்கள் பேச மறுக்கிறீர்கள். ஐடி துறை, மற்ற துறைகளான கல்வி, மருத்துவம், அரசியல் என மற்ற துறைகளில் பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லையா?

எல்லா இடங்களிலும் இந்த பிரச்னை நடப்பது ஊடகங்களுக்கு தெரியும். அப்புறம் ஏன் சினிமா மட்டும் பிடித்துக் கொள்கிறீர்கள். எல்லா துறைகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பு கமிட்டி வேண்டும் என்று சொல்லுங்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் எந்தவிதமான பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை, என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகை குஷ்பூ.

- Advertisement -

சற்று முன்