தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தராா. சமீபத்தில்தான் அவர் தனது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நிராகரித்தார். இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைத்தால் மட்டுமே போதும் என்று அறிக்கை வெளியிட்டார். இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஆரம்பத்தில் அவர் ரூ. 18 கோடி சம்பளம் கேட்டதாகவும் பிறகு ரூ. 6 கோடியாக தனது சம்பளத்தில் குறைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் நயன்தாரா சம்பளம் ரூ. 15 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா குறித்து பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சகைளும் இருந்து வருகின்றன. அதிக சம்பளம் சில மணி நேரம் மட்டுமே ஷூட்டிங் வருவது இரவு படப்பிடிப்பை தவிர்ப்பது வெளியூர்களுக்கு ஷூட்டிங் வர மறுப்பது அழுகை காட்சிகளில் நடிக்க மறுப்பது குறிப்பிட்ட காஸ்ட்யூம் அணிய மறுப்பது என பல புகார்கள் இருந்து வருகின்றன.
எனினும் நயன்தாரா மீதான பல புகார்கள் கூறப்பட்டாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் அதிகளவில் மெனக்கெடுகின்றனர். முக்கிய படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு அவர்தான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் காமெடி நடிகர் யோகிபாபு கூறியதாவது, கோலமாவு கோகிலா படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டு நயன்தாரா என்கூட நடித்ததே பெரிய விஷயம். அந்த படத்தில் வேனில் செல்லும் காட்சியில் ஸ்பீடு பிரேக் அடிக்கும் போது திடீர்னு பார்த்தா அவங்க கால் என் மூஞ்சி மேல வச்சிருப்பாங்க. ஆனா அவங்க அதை பண்ணவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
அப்படி அந்த காட்சியில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க ஆடியன்ஸ் நல்லா சிரிப்பாங்க, பரவாயில்ல பண்ணுங்க என்று நயன்தாராவிடம் பேசி அந்த காட்சியை பண்ண வைத்தோம். அந்த காட்சியில் 7 8 டேக் எடுத்திருப்போம். ஆனால் நயன்தாரா ஒரு டேக்கில் கூட அவங்க காலை கீழே தரையில வைக்கல. வாஸ்லின் தடவிட்டு காலை மேலே வைச்சிருந்தாங்க. ஏனென்றால் காலில் மண்ணு பட்டு அது என் முகத்தில் படக்கூடாதுன்னு அவங்க அப்படி பண்ணினாங்க. அந்த மாதிரி அவங்க ஒரு மிகச்சிறந்த நடிகை என்று நடிகர் யோகி பாபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





