- Advertisement -
Homeபொழுதுபோக்குநீட் தேர்வுக்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்த மாணவர்கள், நாடு முழுவதும் பரவிய பரபரப்பு ...

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்த மாணவர்கள், நாடு முழுவதும் பரவிய பரபரப்பு – நடிகர் சல்மான்கான் விடுத்த வேண்டுகோள்!

- Advertisement -

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான அவர்களது போராட்டம் 34 நாட்களை கடந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்த போராட்டம் டெல்லியில் மட்டுமின்றி தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் பரவி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் மாணவ மாணவியர் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று நீலம் அமைப்பு சார்பில் இயக்குனர்கள் பா ரஞ்சித் வெற்றிமாறன் அமீர் நடிகைகள் ரேவதி ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்ற நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் பேசிய இயக்குனர் அமீர், நீட் தேர்வை எதிர்த்து ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு சிறு கூட்டம் போராடுகிறது. இங்கு தமிழ்நாட்டில் ஜனநாயகன் படத்தை காப்பாற்ற ஒரு பெரிய கூட்டம் போராடுகிறது என்று விமர்சித்து இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியிருப்பதாவது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் டிவீட் செய்து உறுதி அளித்ததால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை மேலும் தொடராமல் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் எனது வீட்டிலிருந்து உணவு அனுப்பி வைக்கிறேன்.

சிஜேபி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளித்து ஒருநாள் கழித்து நடிகர் சல்மான்கான் சமூக அலுவலர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் சோனம் வாங்சுக்குக்கு வீட்டில் இருந்து உணவு அனுப்புவதாகவும், வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை வீட்டுக்கு திரும்பும்படி நடிகர் சல்மான்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்