- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை லைலாவுக்கு இப்படி ஒரு பிரச்னையா? அதுதான் படத்தில் அப்படி செய்துகொண்டே இருக்கிறாரா? - ஆச்சரியப்பட்ட...

நடிகை லைலாவுக்கு இப்படி ஒரு பிரச்னையா? அதுதான் படத்தில் அப்படி செய்துகொண்டே இருக்கிறாரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 1990களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை லைலா. குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நந்தா படத்திலும், பிதாமகன் படத்திலும் லைலா நடித்திருந்தார். பிதாமகன் படத்தில் ஒரு காட்சியில் தன் அப்பாவை பார்த்து லுாசாப்பா நீ என்று லைலா பேசும் அந்த டயலாக், இப்போதும் இணையத்தில் மீம்ஸ் ஆக டிரண்டிங்கில் உள்ளது.

குறிப்பாக நந்தா படத்தில் இலங்கையை சேர்ந்த அகதி பெண்ணாக லைலாவின் நடிப்பு பல காட்சிகளில் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. அதே போல் பிதாமகன் படத்தில் மஞ்சு கேரக்டரில் அவர் சூர்யாவுடன் லங்கா கட்டை உருட்டுவதும், ரயிலில் சிங்கப்பூர் வியாபாரியாக வரும் சூர்யாவை பார்த்து திட்டும் காட்சிகளிலும் மிகவும் ரசிக்கும்படி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

நடிகை லைலா பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கள்ளழகர் என்ற படத்தில் தான் லைகா அறிமுகமானார். தொடர்ந்து ரோஜா வனம் பார்த்தேன் ரசித்தேன் தில் தீனா உன்னை நினைத்து அள்ளித் தந்த வானம் கம்பீரம் பரமசிவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இதில் அஜீத்குமார் பிரசாந்த் சூர்யா விக்ரம் போன்றவர்களுடன் லைலா நடித்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன. சில படங்களில் ஒரு பாடல் காட்சி, ஒரு காட்சி எனவும் லைலா நடித்திருக்கிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பின் சர்தார், சப்தம் போன்ற படங்களில் நடித்து லைலா ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

நடிகை லைலா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும் போது கூறியதாவது, நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி சிரித்துக்கொண்டே இருப்பேன். அது என்னுடைய சுபாவம். பாலா இயக்கத்தில் விக்ரம் சூர்யா நடித்த பிதாமகன் படம் ஷூட்டிங் நடந்தது. அப்போது நீ ஒரு நிமிடம் சிரிக்காமல் இரு என்று என்னிடம் சேலஞ்ச் செய்தார்.

ஆனால் நான் 30 வினாடிகளில் அழ ஆரம்பித்து விட்டேன். என் முகத்தில் போட்டிருந்த மேக்கப் எல்லாம் அழிந்து போய்விட்டது. ஏனென்றால் நான் சிரிப்பதை நிறுத்தினால் தானாக அழ ஆரம்பித்து விடுவேன், என்று நடிகை லைலா கூறியிருக்கிறார். ஓ அதுதான் படத்தில் பல காட்சிகளில் லைலா தேவையின்றி சிரிக்கிறாரா, என்று ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்