தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம்வந்தவர் லட்சுமி மேனன், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ படம்தான் இவரது முதல் படம். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். விக்ரம் பிரபுவுக்கும் இதுதான் அறிமுக படம். இந்த படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்ட கதையாக இருந்தது. யானையை மையப்படுத்திய இந்த படத்தில், விக்ரம் பிரபு- லட்சுமி மேனன் காதலர்களாக நடித்திருந்தனர்.
மலைவாழ் பெண் கேரக்டரில், லட்சுமி மேனன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் லட்சுமி மேனன் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார். ஜிகர்தண்டா, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கொம்பன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், புலிக்குத்தி பாண்டியன் என பல படங்களில் இவரது நடிப்பு பேசும் வகையில் சிறப்பாக இருந்தது.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய லட்சுமி மேனன், மனம் திறந்து பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். நான் நடித்த சில படங்களில் அதிக டேக் வாங்கி இருக்கிறேன். சில படங்களில் புடவை கட்டி நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். ஆனால், புடவை கட்டி நடிப்பது எனக்கு அப்போது கஷ்டமாக இருந்தது. சினிமாவில் பார்ப்பது போல் அல்ல, என் பர்சனாலிட்டியே வேற. கோபம் வந்தால், தூக்கி அடிச்சிருவேன். எனக்கு ஐஸ்கிரீம் கடையை பார்த்துட்டா போதும், அங்கேயே அப்பவே, நான் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவேன். என்னை பார்க்கறவங்க, என்ன இப்படி டான்ஸ் ஆடறாங்கன்னு திட்டக் கூட செய்வாங்க, என்று கூறியிருக்கிறார் லட்சுமி மேனன்.
நடிக்க வந்த புதிதில், ஸ்லிம் ஆன தோற்றத்தில் காட்சியளித்த லட்சுமி மேனன், சற்று அதிகமாக வெயிட் போட்டதால், தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்து போனது. சில ஆண்டுகளாக அவர் தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும், லட்சுமி மேனனின் ஹோம்லி லுக் அழகை ரசிக்கும் ரசிகர்கள், அவர் நடித்த படங்களை இன்னும் விரும்பி பார்த்து ரசித்து வருகின்றனர்.





