- Advertisement -
Homeபொழுதுபோக்குபிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் டைரக்ட் பண்ணாத ஆர்ஜே பாலாஜி - யாரும் ஹீரோ...

பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் டைரக்ட் பண்ணாத ஆர்ஜே பாலாஜி – யாரும் ஹீரோ கிடைக்கலையா? இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாரே!

- Advertisement -

தனது வாழ்க்கை பயணத்தை ரேடியோ ஜாக்கியாக துவங்கியவர் நடிகர் ஆர்ஜே பாலாஜி. துவக்கத்தில் சில தமிழ் படங்களில் காமெடி ரோலில் நடித்த அவர் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனை மூலம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் அடையாளத்தையும் பெற்றார். நான் ஸ்டாப் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். தேவி கவலை வேண்டாம் நானும் ரவுடிதான் போன்ற பல படங்களில் காமெடி ரோலில் நடித்திருந்தார்.

தொடர்ந்து எல்கேஜி என்ற படம் மூலம் அவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் படங்களும் வெற்றி பெற்றன. அடுத்து சொர்க்கவாசல் சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு என்ற படத்தை டைரக்ட் செய்தார். ஆரம்பத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் பிறகு நடிகர் சூர்யா நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. நடிகர் சூர்யா நடித்த படங்களில் இதுவரை 340 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஆர்ஜே பாலாஜி வேறு எந்த படமும் இயக்காமல் இருந்து வருகிறார். எந்த ஹீரோ நடிகரும் அவரது இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை என்று தெரிகிறது. தயாரிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமின்றி சூர்யா போன்ற ஒரு நட்சத்திர ஹீரோவை வைத்து படம் இயக்கி விட்டு பிறகு அவரைவிட அடுத்த நிலையில் உள்ள ஹீரோவை வைத்து படம் இயக்குவதில் அவருக்கும் சிக்கல் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மீண்டும் நடிப்பை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கிடாரி படம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடித்திருந்தார். வில்லன் கேரக்டரில் வேலராமமூர்த்தி அசத்தலான நடிப்பை தந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டில் இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்த மத்தகம் என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்போது பிரசாத் முருகேசன் இயக்கத்தில் நடிகர் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்