நடிகர் விஜய் அரசியல்வாதியான பிறகு தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் இன்னும் மௌனமாக தான் இருந்து வருகின்றனர். அவரது அரசியல் வருகைக்கு வாழ்த்துகள் சொல்லக் கூட யாரும் முன்வரவில்லை. அதுவும் அவருடன் நடித்த பல நடிகைகள் நடிகர்கள் மற்றும் விஜய் படங்களை இயக்கிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பெரும்பாலானோர் இன்னும் விஜய்க்கு வாழ்த்துகள் கூட சொல்ல மறுக்கின்றனர்.
இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் திருப்பாச்சி. இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருந்தார். கிராமத்தில் இருக்கும் கதாநாயகன் விஜய் தனது பாசக்கார தங்கச்சிக்கு சென்னையில் திருமணம் செய்து வைப்பார். கடைசியில் சென்னை ரவுடிகளால் தனது தங்கை குடும்பம் கடுமையாக பாதிக்கப்படும். அதில் தன் நண்பனையும் இழந்த விஜய், சென்னையில் உள்ள ரவுடிகள் கும்பலை அழிப்பதுதான் திருப்பாச்சி படத்தின் கதை.
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நடிகை மல்லிகா. இவர் கடந்த 2002ம் ஆண்டில் மலையாள படம் ஒன்றில் நடித்து நடிகையானார். பிறகு தமிழ் சினிமாவில் மல்லிகா நடித்து அறிமுகமானார். இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. குண்டக்க மண்டக்க திருப்பதி உனக்கும் எனக்கும் தோட்டா உள்ளிட்ட படங்களில் மல்லிகா நடித்திருக்கிறார்.
கடைசியாக இவர் தமிழில் நடித்த சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திந்தார். அதன்பிறகு மலையாள இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இவர் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை மல்லிகா கூறியதாவது, சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் அண்ணன் விஜய். அதை விட்டுவிட்டு மக்களுக்காக நல்லது செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறார்.
அவரை புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக பேசுகிறார்கள். அவரது வளர்ச்சியை எப்படியாவது தடுக்க நினைக்கிறார்கள். ஆனால் அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் செல்வாக்கும் வரவேற்பும் இருக்கிறது. விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை மல்லிகா, விஜய் கூப்பிட்டால் பிரச்சாரத்திற்கு யாராவது போகாமல் இருப்பாங்களா? நிச்சயமாக நான் போவேன்.
பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் அமைதியாக தான் விஜய் இருப்பார். யாரிடமும் அநாவசியமாக பேசவே மாட்டோர். ஆனால் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் மத்தியில் அவர் பேசும்போது அவர்கிட்ட நிறைய மாற்றம் தெரிந்தது. அதை பார்க்கும்போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல என்று நடிகை மல்லிகா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





