- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம்தான் உங்களது கடைசி படமா? படப்பிடிப்பு தளத்தில் விஜய் சொன்ன பதில் - தளபதி...

ஜனநாயகன் படம்தான் உங்களது கடைசி படமா? படப்பிடிப்பு தளத்தில் விஜய் சொன்ன பதில் – தளபதி ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட் தந்த நடிகை மமிதா பைஜூ!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஜனநாயகன் படத்தை தயாரித்திருக்கிறது.

ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தளபதி வெற்றிக்கொண்டான் என்ற பெயரில் அவர் நடிக்கிறார். இந்த பெயரை சுருக்கினால் டிவிகே என அவரது கட்சி பெயரின் முதல் எழுத்துகள் வருவது கவனிக்கத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான ஜனநாயகன் போட்டோவிலும் கையில் டிவிகே கட்சி கொடி சின்னம் விஜய் கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் விஜயின் பிறந்த நாளான இன்று அவர் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் இருந்து டீசர் வெளியாகி பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று இரவு 12 மணிக்குள் 24 மணி நேரத்தில் எத்தனை லட்சம் மில்லியன் பார்வை என்ற அசுரத்தனமான ஒரு சாதனையை எதிர்பார்த்து தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வரும் நிலையில், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என கடந்த ஆண்டிலேயே அறிவித்து விட்டார். அவர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளித்தாலும் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற அவரது முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு படமாவது அவர் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து அந்த படத்தில் நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் கூறியதாவது, நடிகர் விஜய் எப்போதும் படப்பிடிப்பில் கூல் ஆக தான் இருப்பார். சரியான நேரத்துக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுவார். எத்தனை பரபரப்பான நேரத்திலும் அவர் அமைதியாக தான் இருப்பார்.

நான் அவரிடம் ஒருமுறை, ஜனநாயகன் படம்தான் உங்களது கடைசி படமா? அதற்கு பின் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், தெரியவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரிய வரும் என்று கூறியிருக்கிறார். அதன்மூலம் தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் விஜய் நடிப்பில் இருந்து முழுமையாக விலகுவாரா, அல்லது அரசியல் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது நடிப்பாரா என்பதை அவரே அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்