- Advertisement -
சீதாராமம் படம் மூலம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றவர் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் அவர் நடித்து வந்தார்.இதுவரை நேரடியாக தமிழ் படத்தில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 9 மாதங்களாக படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் மிருணாள் இருந்து வருகிறார். இதுகுறித்து மிருணாள் தாக்கூர் கூறுகையில், கடந்த 9 மாதங்களாக நான் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. அர்த்தமுள்ள ஒரு கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். இனி எந்த ஒரு அறிவிப்பும் எனது சமூக ஊடக பக்கத்தில் தான் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்.





