தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத சில நடிகைகளில் நதியாவும் முக்கியமானவர். கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு மோகன் சுரேஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர்.
குறிப்பாக நதியா நடித்த எந்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை. கவர்ச்சியான ஆடைகளையும் அவர் அணிந்து நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த ராஜாதி ராஜா பூவே பூச்சூடவா உயிரே உனக்காக சின்னதம்பி பெரிய தம்பி என பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன.
திருமணத்துக்கு பிறகு பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா பிறகு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடிகர் ரவிமோகனுக்கு அம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். தாமிரபரணி பட்டாளம் திரிஷியம் 2 என பல படங்களில் நதியாக நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது ரீ என்ட்ரியால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தற்போது நடிகை நதியாவுக்கு 59 வயது ஆகிறது. எனினும் அவர் மிகவும் இளமையான தோற்றத்தில் இப்போதும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 59 வயதுகள் ஆன நிலையில் நதியாவின் இளமையான லுக்கை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றன. நடிகை நதியாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் சினிமாவில் நடிக்க வரவில்லை.
இந்நிலையில் நடிகை நதியா ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அங்கே சென்றபோது அங்கு ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் என்பவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். நான் அவருடைய பேஃன் கேர்ள் அதாவது மிக தீவிரமான ரசிகை என்றும் நடிகை நதியா தனது பதிவில் உருக்கமாக நதியாக கூறியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் முன்னாள் மனைவி தான் நிக்கோல் கிட்மேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டவர்தான் நிக்கோல் கிட்மேன். நதியா அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும்போது அவருக்காக குனிந்து நிக்கோல் கிட்மேன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். என்னைவிட 6 இன்ச் அவர் உயரமாக இருக்கிறார் என நதியா அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உங்க அழகுக்கு இப்போது கூட நீங்க ஹாலிவுட்டில் நடிக்கலாம் மேடம் என்று நதியாவுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.





