- Advertisement -
Homeபொழுதுபோக்குலவ் டுடே பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்கும் முன்னணி நடிகை... படத்தை இயக்குவது நடிகையின் கணவர்...

லவ் டுடே பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்கும் முன்னணி நடிகை… படத்தை இயக்குவது நடிகையின் கணவர்…

- Advertisement -

கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவர் அதை youtube இணையத்தில் வெளியிட்டு வந்தார். பிறகு சரியான வாய்ப்பு அவருக்கு கிடைக்க, அதனை பயன்படுத்திக் கொண்ட பிரதீப் கோமாளி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. 90ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து கூறியதால் படம் பலரையும் கவர்ந்தது. அதுபோக படத்தில் சென்டிமென்ட் காட்சிகளும் நிறையவே இருந்ததால், கோமாளியை மக்கள் கொண்டாடினர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய இளைய தலைமுறையினர் செல்போனிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவழிக்க, காதலர்கள் இருவரும் அந்த செல்போனை தங்களுக்குள் மாற்றிக் கொண்டால் என்ன என்னவெல்லாம் நடக்கும் என்பதை சுவாரசியமாக கூறியிருந்தார் பிரதீப்.

படத்தில் இந்த காட்சி தேவை இல்லை என்று யாரும் சொல்லாத வகையில், திரைக்கதை இடம் பெற்றிருந்ததால் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் இதனை தயாரித்திருந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

படத்தில் சத்யராஜ் ராதிகா யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்ததால், லவ் டுடே திரைப்படம் வேறொரு உயரத்தை அடைந்தது. இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் மேல் பலரது பார்வையும் திரும்ப அவர் அடுத்ததாக எந்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அவர், இயக்கத்தை ஓரம் கட்டி விட்டு நடிப்பை தொடர முடிவெடுத்துள்ளார். அவர் முழுக்க முழுக்க நடிகராகும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன்தான் இயக்குகிறார். எல் ஐ சி என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் வேறு ஒரு கதையை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறாராம். இதில் பிரதீப்பிற்கு அக்காவாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். இந்தத் தகவலால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

சற்று முன்