- Advertisement -
Homeபொழுதுபோக்குசிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க அப்படி ஒரு தியாகத்தை செய்தாரா நடிகை நயன்தாரா? - சங்கராந்தி வஸ்துனம்...

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க அப்படி ஒரு தியாகத்தை செய்தாரா நடிகை நயன்தாரா? – சங்கராந்தி வஸ்துனம் செய்ய மாயமாக இருக்குமோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில்தான் தனது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என நிராகரித்தார். அன்னபூரணி படத்துக்கு பின் அவரது படம் எதுவும் வரவேற்பை பெறவில்லை. நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாரா மாதவன் நடித்த டெஸ்ட் படமும் பலத்த தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தெலுங்கில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்துக்கு மெகா 157 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சிரஞ்சீவி நடிக்கும் 157வது படமாகும். நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியுள்ளது.

- Advertisement -

அடுத்த ஆண்டு 2026ல் சங்கராந்தி ( பொங்கல்) பண்டிகைக்கு இந்த படம் வெளியாக உள்ளது. கடந்தாண்டில் வெங்கடேஷ் மீனாட்சி சௌத்ரி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்ற படம் சங்கராந்தி வஸ்துனம். இந்த படத்தை இயக்கிய அனில் ரவிபுடிதான் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தையும் இயக்குவதால், இது மாஸ் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் கேட்ட போது, ரூ. 18 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இதையடுத்து அதிக சம்பளம் என அவர்கள் நயன்தாராவை நிராகரித்து விட்டனர். பிறகு ரூ. 12 கோடி என சம்பளத்தை குறைத்து நயன்தாரா தரப்பில் பேசியிருக்கின்றனர். அதற்கும் மெகா 157 படத் தயாரிப்பாளர்கள் சம்மதிக்கவில்லை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது நடிகை நயன்தாராவின் மார்க்கெட் வெகுவாக சரிந்திருக்கிறது. இளம் கதாநாயகிகள் மமிதா பைஜூ கயாடு லோஹர் போன்ற நடிகைகளுக்கு மவுசு கூடி வருகிறது. அதிக படங்களில் அவர்களை நடிக்க வைக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் முன்வருகிற நிலையில், நயன்தாரா தன் இமேஜை காப்பாற்றிக்கொள்ள சிரஞ்சீவியுடன் நடிக்க தீவிரம் காட்டியிருக்கிறார்.

அதனால் மெகா 157 படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ. 6 கோடி சம்பளத்துக்கு ஓகே சொல்லி இருக்கிறார். பாதி சம்பளத்தை தியாகம் செய்திருக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் படம், இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கம் நல்ல கதை என்பதால் இந்த படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டு பாதி சம்பளத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாக நயன்தாரா தரப்பு சொல்லி இருக்கிறது. அதே நேரத்தில் படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளுக்கும் வர நயன்தாரா கமிட் ஆகியிருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி காரணம், அவரது மார்க்கெட் சினிமாவில் டல் அடிப்பதுதான் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்