- Advertisement -
Homeபொழுதுபோக்குஆமாம், நான் அவனால் ஏமாற்றப்பட்டது உண்மைதான், நடந்த சம்பவத்தை பகிரங்கமாக போட்டுடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்...

ஆமாம், நான் அவனால் ஏமாற்றப்பட்டது உண்மைதான், நடந்த சம்பவத்தை பகிரங்கமாக போட்டுடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் தங்களது இளமையான கவர்ச்சியான அழகால் ரசிகர்களின் மனதில் நிலையாக நின்று விடுகின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இவர், சிறு வயதிலேயே துபாயில் செட்டிலாகி விட்டார். சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு நிவேதா பெத்துராஜ் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நிவேதா பெத்துராஜ் சில மாதங்களுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய இளம் அமைச்சர் ஒருவருடன் இணைத்து பேசப்பட்டது பயங்கர வைரலானது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிவேதா பெத்துராஜ் வீடியோ வெளியிட்டு பதில் அளித்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட பலத்த ஏமாற்றம் குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வலைதள பக்கத்தில் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனால் நான் ஏமாற்றப்பட்டேன்.

முதலில் அந்த சிறுவன் காரில் இருந்த என்னிடம் வந்து பணம் கேட்டான். இலவசமாக அவனுக்கு பணம் கொடுக்க நான் மறுத்துவிட்டேன். அதையடுத்து அவன் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து 50 ரூபாய்க்கு அந்த புத்தகத்தை என்னிடம் விற்பனை செய்ய முயற்சித்தான்.

- Advertisement -

நான் அவனுக்கு 50 ரூபாய்க்கு ரூபாய்க்கு பதிலாக 100 ரூபாய் கொடுத்தேன். உடனே அந்த சிறுவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். அப்போது நான் அந்த புத்தகத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, நான் கொடுத்த 100 ரூபாய் திருப்பிக் கேட்டேன்.

அந்த நேரத்தில் அந்த புத்தகத்தை என் காருக்குள் வீசிவிட்டு அந்த சிறுவன், என் கையில் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு வேகமாக ஓடிப் போய்விட்டான். இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா, இந்த பிரச்னையை நீங்கள் சந்தித்துள்ளீர்களா என்று நிவேதா பெத்துராஜ் அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் புகார் அளித்த நிலையில், அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்