தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருப்பவர் ரஜினிகாந்த். பைரவி படத்தில் ஹீரோவாக ரஜினி நடித்த போது அந்த பட்டத்தை அவருக்கு வழங்கியவர் கலைஞானம். முதன்முறையாக ரஜினியை கதாநாயகன் ஆக்கியவர் அவர்தான். அதுவரை ரஜினி துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் போட்டி உருவானது. 1990களில் பல ஹிட் படங்களை கொடுத்து கமலை மிஞ்சிய ஒரு நடிகராக, வசூல் மன்னனாக ரஜினி முன்னேறிய நிலையில் இன்று வரை உச்சத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கமல், அவருக்கு அடுத்த நிலையில்தான் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் அதிக வசூலில் யார் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் சூப்பர் ஸ்டார் என புது பிரச்னையை கிளப்பி, இப்போதைக்கு சூப்பர் ஸ்டார் விஜய் என சிலர் கிளப்பி விட்டனர். இறுதியில் சூப்பர் ஸ்டார் என்றால் அவர் ஒருவர்தான் என நடிகர் விஜயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து இப்போது ஓய்ந்திருக்கிறது.
இந்நிலையில் நடிகை பார்வதி, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பஞ்சாயத்தை மீண்டும் கிளப்பி விட்டிருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள பார்வதி தமிழில் பூ, மரியான், உத்தமவில்லன், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்தவர். தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான நடிகையாக இருக்கிறார்.
நடிகை பார்வதி, அடிக்கடி சர்ச்சையாக கருத்துகளை வெளியிட்டு விமர்சனங்களில் சிக்கிக்கொள்வது வழக்கமாக இருந்துவருகிறது. இப்போது அவர் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் எதுவும் கொடுப்பது இல்லை. இதனால் டைம்தான் வேஸ்ட் ஆகிறது. அந்த பட்டத்தால் பயனடைந்தவர்கள் என்று யாருமில்லை. அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.
சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை விட சூப்பர் நடிகர் என்று மாற்றிச் சொல்லலாம் என நான் விரும்புகிறேன். அந்த சூப்பர் நடிகர் பட்டத்தை பஹத் பாசில் போன்ற நடிகர்களுக்கு கொடுக்கலாம் என்று பார்வதி கூறியிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் சூப்பர் ஸ்டார் என ரஜினியை, தெலுங்கில் சூப்பர் ஸ்டார் என சிரஞ்சீவியை, மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் என மம்முட்டியை ரசிகர்கள் கூறிவரும் நிலையில், நடிகை பார்வதியில் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





