கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். வில்லன் கேரக்டரில் நரேன் நடித்திருந்தார். தனியாக பங்களாவில் வசிக்கும் வசதியான வயதான தம்பதிகளை கொன்று அவர்களது சொத்துகளை கொள்ளையடிப்பதுதான் இந்த படத்தின் கதை.
ஆனால் முகமூடி படம் ஏனோ எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. அதனால் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற முடியாமல் இந்தி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பூஜா ஹெக்டே. அங்கு பல வெற்றிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவருக்கு பெரிய வரவேற்பும் ரசிகர்களின் அமோக ஆதரவும் கிடைத்தது.
இதையடுத்து நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் மீண்டும் தனது 2வது சுற்றை ஆரம்பித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து மீண்டும் விஜயுடன் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ள ரெட்ரோ படத்தின் நாயகியும் பூஜா ஹெக்டே தான். அத்துடன் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
ரெட்ரோ படம் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 கோடி பாலோயர்ஸ் உள்ளனர். அதற்காக என் படத்திற்கு 3 கோடி டிக்கெட் விற்பனையாகும் எந்த உத்தரவாதமும் கிடையாது. அந்த 3 கோடி பாலேயார்ஸ்சும் என் ரசிகர்களாக என் படத்தை பார்க்க வருவார்கள் என்று சொல்ல முடியாது.
அதேபோல் 50 லட்சம் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்சை கொண்ட பல சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் படங்களுக்கு அதிக கூட்டம் வருகிறது. சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் கிடையாது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று நடிகை பூஜா ஹெக்டே அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





