- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஹீரோவோட ஜோடி சேர முடியலே, அவர் நடிச்ச படத்தில் நான் நடிச்சும் அந்த ஆசை...

இந்த ஹீரோவோட ஜோடி சேர முடியலே, அவர் நடிச்ச படத்தில் நான் நடிச்சும் அந்த ஆசை நிறைவேறலையே – மனம் நொந்து வருத்தப்பட்ட மாஜி நாயகி ரம்பா

- Advertisement -

தமிழ் சினிமாவில், நடிகை ரம்பா ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்த போது, பல ரசிகர்களின் மனங்களை அள்ளி விட்டார். ஒவ்வொரு நடிகைக்கும் அவரது அழகுக்கு ஒரு செல்லப் பெயர் வைப்பதுண்டு. அதன்படி ரம்பாவுக்கு தொடையழகி என்ற பெயர் உண்டு.

அருணாசலம் படத்தில் ரஜினிகாந்த் செகரட்டரியாக நடித்திருப்பார். காதலா காதலா என்ற கமல், பிரபுதேவா நடித்த படத்தில் கமலுக்கு ஜோடியாக சவுந்தர்யாவும், ரம்பா, பிரபுதேவாவுக்கு ஜோடியாகவும் நடித்திருப்பார். சுந்தரபுருஷன் படத்தில், லிவிங்ஸ்டனுக்கு ரம்பா ஜோடியாக, சிறந்த நடிப்பை தந்திருப்பார் ரம்பா. லிவிங்ஸ்டனுக்கு அவர் ஜோடியாக நடித்தது, பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது.

- Advertisement -

நினைத்தேன் வந்தாய், மின்சாரக் கண்ணா, சுயம்வரம், உழவன், தர்மசக்கரம், உனக்காக எல்லாம் உனக்காக, என்றென்றும் காதல், அழகான நாட்கள், சுக்ரன் என பல படங்களில் ரம்பா நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படங்களாக அமைந்திருந்தன. குறிப்பாக சுந்தர் சி படங்களில், ரம்பா தொடர்ந்து நடித்தார். அவரது படங்கள், பெரிய அளவில் பேசப்பட்ட வெற்றிப்படங்களாக அமைந்தன.

ஒரு கட்டத்துக்கு பிறகு, திருமணம் செய்துக்கொண்டு கனடாவில் ரம்பா, குடும்பத்துடன் செட்டிலாகி விட்டது. அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். குடும்ப பொறுப்புகளை கவனிக்கவும், பிள்ளைகளை வளர்க்கவும் ஒரு குடும்பத் தலைவியாக நேரத்தை ஒதுக்கி விட்ட ரம்பா, அதற்கு பின் சினிமாவில் நடிக்க ஆர்வமே காட்டவில்லை. சினிமா வாய்ப்புகளை தேடவும் இல்லை.

- Advertisement -

இதுகுறித்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரம்பா, எனக்கு குடும்பம் மற்றும் பிள்ளைகளை கவனிக்கவே நேரம் சரியாக உள்ளது. நான் சினிமாவில் நடித்த போது இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் இப்போதும் எனக்கு நண்பர்களாக தொடர்பில்தான் உள்ளனர். ஆனால் நான் யாரிடமும் சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கேட்டு தொல்லை செய்வதில்லை,.

நான் பல ஹீீரோக்களுடன் நடித்தேன். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பல நடிகர்களுடன் நடித்தேன். ஆனால் சியான் விக்ரமுடன் ஜோடியாக நான் நடிக்க முடியவில்லை. ஒரு தெலுங்கு படத்தில் இருவருமே நடித்தோம். ஆனால், விக்ரமுக்கு ஜோடியாக வேறொரு ஹீரோயின் நடித்தார். எனக்கு ஜோடியாக வேறொரு ஹீரோ நடித்தார் என, தனது நீண்டகால விருப்பத்தை, ஏக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ரம்பா.

- Advertisement -

சற்று முன்