- Advertisement -
Homeபொழுதுபோக்குடியூட் படத்தில் அந்த 2 பாடல்கள் விவகாரம்… வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் - இந்த...

டியூட் படத்தில் அந்த 2 பாடல்கள் விவகாரம்… வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் – இந்த பஞ்சாயத்தில் கணிசமான லாபம் பார்த்த இசையமைப்பாளர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 49 ஆண்டுகளாக இசை சக்கரவர்த்தியாக வலம் வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. தனிப்பட்ட முறையில் அவர் மீது பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் இசையில் அவர் ஒரு ராஜா தான். அதனால்தான் அவரை இசைஞானி என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். 84 வயதிலும் இப்போது அவர் பிஸியாக படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி சிம்பொனியிலும் சாதித்து வருகிறார்.

இளையராஜா இசையமைத்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான். அதிலும் கடந்த 1980 90களில் வெளியான இவரது பல பாடல்கள் இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகின்றன. அதனால் அதுபோன்ற சில பாடல்களை இன்றைய இயக்குனர்கள் தங்களது படங்களில் இடம்பெற செய்கின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறுவதால் பல இயக்குனர்கள் இதை பாலோ செய்கின்றனர்.

- Advertisement -

ஆனால் எனது இசையமைப்பில் உருவான பாடல்களை, என் அனுமதியின்றி படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா தொடர்ந்து கூறி வருகிறார். அப்படி அவரது எச்சரிக்கையை மீறி படங்களில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வது இளையராஜாவின் வழக்கமாக இருந்து வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் ஒருவித வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான 2 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. புது நெல்லு புது நாத்து படத்தில் வரும் கருத்த மச்சான் என்ற பாடலும் பணக்காரன் படத்தில் வரும் நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணும்தான் என்ற பாடல்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த 2 பாடல்களையும் டியூட் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

- Advertisement -

இந்த பாடல்களின் உரிமை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும் சோனி நிறுவனத்திடமிருந்து முறையாக அனுமதி பெற்று இந்த 2 பாடல்களையும் டியூட் படத்தில் பயன்படுத்தியதாகவும் அந்த படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாகவும் இந்த பாடல்களை பயன்படுத்தியதற்காக டியூட் படத்தில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை சுமூகமாக முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்