கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா ஜானகிராமன் அருணாசலம் காதலா காதலா நினைத்தேன் வந்தாய் என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். ஒரு கட்டத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துவிட்டு செட்டிலாகி விட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக பிள்ளைகள் குடும்பம் என்று இருந்த நடிகை ரம்பா, தனக்கு நடிக்க வந்த பல வாய்ப்புகளை ரம்பா நிராகரித்தார். குறிப்பாக இந்தியில் அவருக்கு பல டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ் சினிமாவிலும் திருமணத்துக்கு பின் நடிக்க வந்த வாய்ப்புகளை ரம்பா மறுத்துவிட்டார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மற்றும் பெங்காலி போஜ்புரி என பல மொழிகளில் நடித்த நடிகை ரம்பா, 100க்கும் மேற்பட்ட படங்களில் கடந்த 1990களில் நடித்த பிஸியான நடிகைதான். எனினும் திருமணத்துக்கு பிறகு முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க நடிகை ரம்பா தயாராகி விட்டார்.
நடிகை ரம்பாவின் கணவர் தொழிலதிபராக உள்ளார். அதே போல் நடிகை ரம்பாவும் திருமணத்துக்கு பின் சமையலறை பராமரிப்பு மற்றும் சமையலறை உருவாக்கம் குறித்த படிப்பை படித்துள்ளார். அதுசார்ந்த தொழிலையும் அவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். இதுதவிர தனது கணவர் நடத்தி வரும் பிஸினஸ்களையும் நடிகை ரம்பா ஒரு நிர்வாகியாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது டிவி சேனல் ஒன்றில் ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 என்ற நிகழ்ச்சியில் நடிகை ரம்பா நடுவராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோரும் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா மாஸ்டரும் கலந்துக்கொண்டார்.
அப்போது கலா மாஸ்டர் பேசுகையில், ரம்பாவிடம் ரம்பா மேடம் என்று குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளித்த நடிகை ரம்பா, எந்த பிஸினஸ் பெண்ணும் தன்னை மேடம் என்று அழைப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்களை தங்களது பெயருடன் அடையாளப்படுத்த வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். எனவே நீங்கள் மேடம் என்று என்னை அழைக்க வேண்டாம். ரம்பா என அழைத்தாலே போதும், என்று கூறியிருக்கிறார்.





