- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க ரேஞ்சுக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கறீங்களே? - பிரபல நடிகையிடம் கேட்ட கேள்விக்கு அவர்...

உங்க ரேஞ்சுக்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கறீங்களே? – பிரபல நடிகையிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் இதுதான்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் சிவகார்த்தியேகன். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் மற்றும் நடிகர், நடிகையர் நேர்காணல் போன்றவற்றில் சிவகார்த்திகேயன் பங்கேற்றவர். அந்த வகையில், இயக்குநர் பாண்டிராஜன், தனுஷ் உடன் ஏற்பட்ட பழக்கம் சினிமாவுக்கு அவரை அழைத்து வந்தது.

மெரினா படத்தில் ஓவியா, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தனர். அடுத்தது மனம் கொத்தி பறவை என்ற படத்திலும் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களில் ஒருவராக்கியது. தொடர்ந்து ரஜினி முருகன், மான்கராத்தே, ரெமோ, காக்கிச்சட்டை, வேலைக்காரன் போன்ற பல படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

- Advertisement -

துவக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ஹீரோயின்களின் தேர்வு மிக முக்கியமாக இருந்தது. ஏனெனில் பெரிய நடிகைகள், முன்னணி நடிகைகள் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் பட்சத்தில் அவரது வெயிட்டும் அதிகரிக்கும் என்ற ஒரு நிலைப்பாடும் இருந்தது. அதனால் தனது பினாமி தயாரிப்பாளர் மூலம் சில படங்களை சிவகார்த்திகேயனே பிரமோ செய்தததாகவும் தகவல்கள் உள்ளது.

இதற்காக முன்னணி ஹீரோயின்களான ஹன்சிகா மோத்வானி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்றவர்களை தனது ஜோடியாக்கினார் சிவகார்த்திகேயன். அதன்மூலமும் தன்னை ஒரு முன்னணி ஹீரோ என்பதற்கான தோற்றத்தை அவர் ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கடந்த சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றிப் பெற்றன. சில படங்கள் தோல்வியடைந்தன.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மான் கராத்தே முக்கிய படமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை. அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்திருந்தார். விஜய், தனுஷ், ஜெயம் ரவி போன்ற பெரிய நடிகர்களின் நாயகியான அவர் சிவகார்த்திகேயனுக்கு நடித்தது பலருக்கும் நெருடலாக இருந்தது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஹன்சிகா மோத்வானி, மான்கராத்தே படத்தில் நடித்த போது, சிவகார்த்திகேயன் ஒரு முன்னணி கதாநாயகனாக வந்து விடுவார் என்று எனக்குத் தெரியும். அவருடன் நான் ஜோடியாக நடித்த போது, சிவகார்த்திகேயனுடன் ஏன் ஜோடியாக நடிக்கறீங்க என்று என்னிடம் கேட்டனர். எனக்கு அப்போதே தெரியும் அவர் திறமையான நபர் என்று அவர்களுக்கு கூறினேன். இப்போது அவரது வெற்றியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்