சினிமாவில் சிறந்த நடிப்பை தரும் நடிகைகள், கவர்ச்சியை நம்புவது இல்லை. கவர்ச்சி காட்டாத நடிகைகளை, அதிக நாட்கள் நடிப்புத் துறையில் நீடித்திருக்க கலைத்துறையும் விடுவது இல்லை. அதனால் நல்ல நடிப்பாற்றல் இருந்தும் போதிய வாய்ப்பின்றி பல நடிகைகள், சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்வில் செட்டிலாகி விடுகின்றனர். ஒரு சிலர், பிற மொழி படங்களுக்கு நடிக்கச் சென்று விடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவரது சித்தப்பா பிரபல நடிகர் அருண்பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2015ம் ஆண்டில் ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் ஏழை பெண் தொழிலாளியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக ரம்யா பாண்டியன் பங்கேற்றார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குபிடித்து அவர் 4வது போட்டியாளராக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ரம்யா பாண்டியனுக்கு வரும் நவம்பரில் திருமணம் நடக்க உள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த லவல் தவான் என்ற தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வரும் நவம்பர் 8ம் தேதி இவர்களது திருமணம் ரிஷிகேஷில் நடைபெற உள்ளது. நவம்பர் 15ம் தேதி அவர்களது திருமண ரிசப்ஷன் சென்னையில் நடைபெற உள்ளது.
லவல் தவான், ரம்யா பாண்டியன் திருமணம் காதல் திருமணம்தான் என்ற நிலையில், சினிமா கதையை மிஞ்சும் சூப்பரான ஒரு கதையாக உள்ளது. ஏனெனில் ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பாளர் ரவிசங்கர்ஜி நடத்தும் வாழும் கலை யோகா பயிற்சியில், யோகா பயிற்சியாளராக இருப்பவர்தான் லவல் தவான். அவர் பெங்களூருவில் இந்த பயிற்சிகளை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் பெங்களூருவில் நடந்த வாழும் கலை யோகா பயிற்சியில் நடிகை ரம்யா பாண்டியன் பங்கேற்றார். அப்போது யோகா பயிற்சியளித்த லவல் தவானுக்கும், ரம்யா பாண்டியனுக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம், நட்பாக மாறியது, நாளடைவில் அது காதலாகவும் மாறி திருமணத்தில் முடிந்திருக்கிறது. யோகா பயிற்சியுடன், காதல் பயிற்சியும் தந்து ரம்யா பாண்டியனை கவர்ந்திருக்கிறார். இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





