- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு, குட்நைட் பட இயக்குனர் அப்செட் - இது சரியில்லையே...

நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு, குட்நைட் பட இயக்குனர் அப்செட் – இது சரியில்லையே ப்ரோ…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அமரன். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் 325 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருந்தார். இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.

அமரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கராக இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படமாக இது உள்ளது. ஸ்ரீலீலா அதர்வா ரவிமோகன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.

- Advertisement -

அதே போல் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த 2 படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஏற்கனவே கதை கேட்டு ஓகே செய்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நடிகர் மணிகண்டன் நடிப்பில் குட்நைட் படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற போது பல நடிகர்கள், அந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரிடம் கதை கேட்டார்கள். படம் பண்ண சொன்னார்கள். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். ஆனால் அவர்களை எல்லாம் தள்ளிவைத்து விட்டு இயக்குனர் விநாயக் சந்திரசேகர் சிவகார்த்திகேயனுக்கு முன்னுரிமை தந்தார்.

- Advertisement -

ஆனால் இப்போது நிலமை வேறு மாதிரியாகி விட்டது. மதராஸி பராசக்தி படங்களுக்கு பிறகு இயக்குனர் விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் இருந்த நிலையில், அந்த படத்தை பெண்டிங்கில் வைக்கும்படி சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். இதனால் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.

இயக்குனர் புஷ்கர் காயத்ரி சொன்ன ஒரு கதை மிகவும் பிடித்துப் போய்விட்டதால் அந்த படத்தில் அடுத்து நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்திருக்கிறார். விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தை தயாரிக்கும் அதே பேஷன் ஸ்டுடியோ சுதன்தான் இந்த படத்துக்கும் தயாரிப்பாளர் என்று சொல்லப்படுகிறது. அதனால் குட்நைட் பட இயக்குனர் சிவகார்த்திகேயன் மீண்டும் தேதி தரும் வரை காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்