- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ சம்பளம், படத்தோட பட்ஜெட் குறைங்க என நிபந்தனை விதித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் -...

ஹீரோ சம்பளம், படத்தோட பட்ஜெட் குறைங்க என நிபந்தனை விதித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் – வேறு கைக்கு மாறிய விஷால் படம், ஆரம்பமே பஞ்சாயத்தே இருக்குதே?

- Advertisement -

நடிகர் விஷால் தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அவர் நடிக்க வந்த ஆரம்பகட்டத்தில் செல்லமே திமிரு சண்டக்கோழி சிவப்பதிகாரம் தாமிரபரணி நான் சிவப்பு மனிதன் மலைக்கோட்டை துப்பறிவாளன் அவன் இவன் போன்ற படங்கள் நடிகர் விஷாலுக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக விஷால் நடிக்கும் எந்த படமுமே பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், அந்த படத்தை பொருத்தவரை அதில் உண்மையான ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை, அதிக வசூலை பெற்றவர் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான் என்பது மறுக்க முடியாதது.

- Advertisement -

மார்க் ஆண்டனி படத்துக்கு பிறகு விஷால் நடித்த படம் ரத்னம். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படமும் பெரிய அளவில் பிளாப் ஆனது. அதற்கு பின், துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்கப் போவதாக விஷால் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக சிவராஜ்குமார் அமெரிக்காக சென்றதால், அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.

- Advertisement -

இதையடுத்து இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவராஜ்குமாருக்கு பதிலாக, நடிகர் விஷால் நடிக்க ஒரு படம் கமிட் செய்யப்பட்டது. ஆனால் இது சிவராஜ்குமார் நடிக்க வேண்டிய கதை அல்ல, இது வேறு கதை என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க விஷால் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். படத்தின் மேக்கிங் செலவு மட்டுமே ரூ. 18 கோடி என்று பட்ஜெட் தரப்பட்டுள்ளது.

அதனால் மார்க்கெட் இழந்த நடிகர் விஷாலுக்கு ரூ. 20 கோடி சம்பளம் அதிகம். அவரது சம்பளத்தை குறைக்க வேண்டும். அதே போல், படத்தின் தயாரிப்பு செலவையும் கணிசமாக குறைத்தால் மட்டுமே இந்த படத்தை தயாரிக்கிறோம் என, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கட் அண்ட் ரைட்டாக நிபந்தனை விதித்துள்ளது. இதையடுத்து இந்த படத்தை விடிடி என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் அந்த தகவல் உறுதியாகவில்லை.

- Advertisement -

சற்று முன்