தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பல வெற்றிப் படங்களில் நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் எம்எல்ஏவாக அமைச்சராக ரோஜா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபமாக தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை ரோஜா லெனின் பாண்டியன் அன்பே டயானா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். முதலில் நாயகியாக நடித்த ரோஜா இப்போது 50 வயதுகளை கடந்த நிலையில் அம்மா கேரக்டர்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். பல படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ரோஜா கூறியதாவது, கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் அதிர்ஷ்டத்தால் முதல்வர் ஆகிவிட்டதால் விஜய்க்கு அந்த கஷ்டம் தெரியவில்லை. ஆனால் இந்த வாட்டி அவர் தோற்று இருந்தால் கட்சியை நடத்துவதற்கே இந்த 5 வருஷத்துல ரொம்பவும் கஷ்டப்பட்டு இருப்பாங்க.
விஜய் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அதிர்ஷ்டம் மட்டும்தான் காரணம். கண்டிப்பாக அதை அதிர்ஷ்டம் என்றே நான் சொல்கிறேன். அவர் வந்து ரொம்ப நாள் கஷ்டப்பட்டது என்று எதுவுமே இல்லையே? ஒரு கட்சி நடத்தினால் நிறைய சிரமங்களை சந்திக்கணும். எல்லா மாவட்டங்களுக்கும் எல்லா தொகுதிகளுக்கும் போய் மக்களை சந்திக்கணும்.
தொகுதி வாரியாக போய் மக்களை பார்த்துட்டு அங்க இருக்கிற பிரச்னைகளை எல்லாம் இப்படி தீர்க்கப் போறேன், இந்த மாதிரி இதை எல்லாம் மாத்தி செய்யப் போறேன் என்று சொல்லணும். அந்த மாதிரி சொல்வதற்கு டைம் இல்லே. அவர் பிரசாரத்துக்கே பாதி தமிழ்நாடு போகவே இல்லை என்பது உங்களுக்கே தெரியும்
கரூர் சம்பவத்துக்கு அப்புறம் அவர் ரொம்பவும் பயந்துட்டு போகவும் இல்லை. எப்படி படத்துல வில்லன் கூட பைட் பண்ணி சண்டை போட்டு ஏழைகளை காப்பாத்துகிறார், அந்த மாதிரி பண்ணுவாங்கன்னு ஒரு கற்பனையில் தான் மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க. இவர் உண்மையா என்ன பண்ணுவாருன்னு யாருக்குமே தெரியாது என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





