- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்லா வெச்சு செஞ்சுட்டாரா வெங்கட்பிரபு, நொந்துபோன விஜய் ரசிகர்கள், எங்க தளபதியை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே? -...

நல்லா வெச்சு செஞ்சுட்டாரா வெங்கட்பிரபு, நொந்துபோன விஜய் ரசிகர்கள், எங்க தளபதியை இப்படி அசிங்கப்படுத்திட்டாரே? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் விஜய் என்றாலே மாஸ்தான். அவரது ரசிகர்கள் விஜய் திரையில் வந்தாலே தியேட்டர் சீட்டை கிழித்து, அடித்த நொறுக்கும் அளவுக்கு விஜய் மீது அதிகமான அன்பு காட்டுகின்றனர். அதன் காரணமாகதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் என்ற ஆசையில் விஜய் அரசியலில் இறங்க முடிவு செய்திருக்கிறார்.

விஜய் படங்களை பொருத்த வரை ஓவர் பில்டப்புக்கு ஒடம்புக்கு ஆகாது என்று சொல்வதுபோல தான் ஓவராக ஹீரோயிசம் இருக்கும். வேகமாக ஓடுகிற ரயிலை, குருவி படத்தில் ஓடியே பிடித்து ஏறுவார். லியோ படம் கிளைமாக்ஸில் 300 பேரை ஒருவரே அடித்து சாய்ப்பார். அடுத்து வரும் படத்தில் பறக்கிற விமானத்தில் ஜம்ப் பண்ணி ஏறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

- Advertisement -

இப்போது நடித்துவரும் வெங்கட்பிரபு படத்திலும் பில்டப்புக்கு ஒன்றும் பஞ்சம் இருக்காது என்று தாராளமாக நம்பலாம்.ஏனென்றால் கமர்ஷியல் படங்கள் என்றாலே, ஹீரோக்களை தூக்கி பிடிக்கிற காட்சியமைப்புகளும், கதையும்தான் இருக்கும்.

இந்த சூழலில் இந்த படத்தில் அப்பா, மகன் என்ற 2 கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். இதில் மகனாக நடிக்கும் விஜய்க்கு டீஏஜிங் செய்து உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவன் போன்ற தோற்றத்தில் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. சில புகைப்படங்களிலும் விஜய் அப்படித்தான் இருந்தார்.

- Advertisement -

ஆனால் இன்று ஒரு செல்பி புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் மீசை தாடி இல்லாமல், வித்யாசமான ஒரு ஹேர்ஸ்டைலில் டீ சர்ட் அணிந்திருக்கும் விஜய் அதில் காணப்படுகிறார். அதற்கு சற்று தொலைவில், கேட்டுக்கு வெளியே ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.

உண்மையில் இந்த கெட்டப்பில் விஜயை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த விநாடியே, எங்க தளபதியை இப்படி ஒரு கேவலமான கெட்டப்பில் நடிக்க வைத்தது ஏன், எதற்காக இப்படி ஒரு தோற்றத்தில் இருக்கிறார் என ஆத்திரப்படாமல் இருக்க முடியாது. ஏனென்றால் அந்த கெட்டப்பில் விஜய் திரையில் வந்தால், பார்க்க சகிக்காது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும், வெங்கட்பிரபு பக்கம் திரும்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்