- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னால் முடிந்த வரை தூய்மையாக இருக்கிறேன், இந்த கேரக்டரில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய...

என்னால் முடிந்த வரை தூய்மையாக இருக்கிறேன், இந்த கேரக்டரில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் – நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சி!

- Advertisement -

மலையாள சினிமாவில் மலர் டீச்சர் கேரக்டரில் நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்தவர் நடிகை சாய்பல்லவி. அவர் நடித்த மாரி 2 என்ஜிகே கார்கி அமரன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தன. குறிப்பாக அமரன் படத்தில் அவர் ஏற்று நடித்த இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டர் அவரை மிகவும் பிரபலப்படுத்தி இந்தி சினிமாவுக்கும் கொண்டு சென்றது.

இந்தியில் இராமாயணா என்ற படம் பிரம்மாண்ட காவியமாக உருவாகி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகனாக இராமபிரான் கேரக்டரில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். மேலும் சீதாதேவி கேரக்டரில் சாய் பல்லவியும் வில்லன் கேரக்டரில் யஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் பிரமோசனுக்காக டெல்லியில் ‘இராமாயண பிரதம சங்கல்ப்’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் படத்தின் நாயகி சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, எனது இந்தி மொழி சரியாக இல்லை என்றால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

இராமாயணா படத்தில் சீதாதேவி போன்ற ஒரு தெய்வீக கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகைகளுக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. எதிர்கால மக்கள் இந்த திரைப்படத்தை வியந்து பார்க்கும் வகையில் தங்களது இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து படக்குழு உழைத்து உள்ளது.

- Advertisement -

இந்த படத்துக்காக என்னை தேர்ந்து எடுத்ததற்காக நமித் மல்ஹோத்ரா சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சீதா தேவியாக நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இது நாம் தேடிப்போய் பெறுகிற விஷயம் அல்ல. நான் தியானம் செய்து சீதா தேவியே என் மூலம் நடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். எனது எண்ணங்களை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு தூய்மையாக வைத்திருக்க முயன்றேன்.

இந்த சீதா கதாபாத்திரத்தின் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று சாய் பல்லவி நெகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இந்தியில் உருவாகி வரும் இராமாயணா படத்தை அடுத்து தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம் என்ற படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி, அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.

- Advertisement -

சற்று முன்