- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய், அஜீத் படங்களில் நடிக்க மறுத்த பிரபல நடிகை - அதுக்கு அவர் சொன்ன...

நடிகர் விஜய், அஜீத் படங்களில் நடிக்க மறுத்த பிரபல நடிகை – அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் பெரிய ஹைலைட்

- Advertisement -

நடிகர்கள் விஜய், அஜீத்குமார் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக டாப் ஸ்டார்களாக இருக்கின்றனர். அவர்களது படங்களில் நடிக்க பல நடிகைகள் போட்டி போடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், அவர்களது படங்களில் நடித்தால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விடலாம்.

ஆனால் அஜீத், விஜய் படங்களில் நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகையான சாய்பல்லவி மறுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதற்கும் அவர் வளர்ந்துவரும் நடிகையாக தான் இருக்கிறார். இப்படி மறுப்பதால், அவரது திரையுலக வளர்ச்சி பாதிக்கப்படுமே என்று கூறப்படும் நிலையில், அவர் மறுப்பு சொன்னதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்த வலிமை படத்தில், கதாநாயகியாக நடிக்க வேண்டியவர் சாய்பல்லவி. ஆனால், படத்தில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் ஹூமா குரேஷி அந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு விதத்தில் அந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் உண்மைதான்.

அதேபோல் கடந்த 2023ல் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த வாரிசு படத்தில் விஜய் படத்தில், ராஷ்மிகா மந்தனா கேரக்டரில் நடிக்க முதலில் கமிட் ஆனது சாய் பல்லவிதான். அதுபோன்ற ஒரு கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன் எனவும் சாய்பல்லவி மறுத்து விட்டார்.

- Advertisement -

அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த காற்று வெளியிடை படத்திலும், அதிதி ராவ் கேரக்டரில் நடிக்க முதலில் அணுகியது சாய் பல்லவியைதான். அந்த படத்தில் கதை சரியில்லை என்று கூறியிருக்கிறார். தெலுங்கு சினிமாவில் போலோ சங்கர் படத்திலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் சாய் பல்லவி மறுத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி லியோ படத்திலும் முதலில் திரிஷா கேரக்டரில் நடிக்க கமிட் ஆக இருந்தது சாய்பல்லவிதான். ஆனால், அந்த படத்திலும் நான் நடிக்க மாட்டேன் என சாய்பல்லவி மறுத்திருக்கிறார். இதற்கு காரணம் என்னவென்றால், ரீமேக் படங்களில் நடிக்க தனக்கு பிடிக்காது என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி. விஜய், அஜீத், கார்த்தி, சிரஞ்சீவி என முன்னணி ஹீரோக்களில் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை சாய்பல்லவி இப்படி மிஸ் பண்ணியிருக்கிறாரோ என, பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்