- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னைக்கு வருவதை என் வீட்டுக்கு வருவதாக நினைப்பேன், தமிழில் நான் நிறைய படங்களை மிஸ்...

சென்னைக்கு வருவதை என் வீட்டுக்கு வருவதாக நினைப்பேன், தமிழில் நான் நிறைய படங்களை மிஸ் செய்துவிட்டேன் – வருத்தமாக பேசிய நடிகை சமந்தா!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் இந்தியில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். அந்த வெப்சீரிஸ்சை இயக்கிய இயக்குனர் ராஜ் நெடிமூரை சமந்தா கடந்தாண்டு இறுதியில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவை ஈஷா மையம் லிங்க பைரவி கோவிலில் எளிமையாக நடந்தது.

நடிகை சமந்தா படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் நடிகை சமந்தா தயாரித்து அவரே கதாநாயகியாக நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இந்த தெலுங்கு படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த படத்தை இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தில் குல்ஷன் தேவய்யா திகாந்த் கௌதமி மஞ்சுஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி என்ற படத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எங்கள் தங்கம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்று பேசியதாவது, சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு சொந்த வீட்டுக்கு வருவது போன்றது தான். தமிழில் நான் இன்னும் அதிக படங்களில் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் எனக்கு இருக்கிறது.

- Advertisement -

நிறைய தமிழ் படங்களை நான் மிஸ் செய்து விட்டேன். ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும் நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். எங்கள் தங்கம் படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு படத்தை உருவாக்குவதும் அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்த படம் எனக்கு உணர்த்திவிட்டது.

குறிப்பாக இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தது. இந்த படம் பெண்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரை உலகம் என் வீடு. அந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கும் படமாக இந்த படம் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று நடிகை சமந்தா பேசியிருக்கிறார். இந்த படம் பாசிட்டிவ் ஆன விமர்சனங்களுடன் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்