- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்பில் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மட்டுமே தருவதால் பயன் எதுவும் இல்லை...

நடிப்பில் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மட்டுமே தருவதால் பயன் எதுவும் இல்லை – நடிகை சமந்தா ஓபன்டாக்!

- Advertisement -

நடிகை சமந்தா நடித்த மா இண்டி பங்காரம் என்ற தெலுங்கு படம் நாளை 19ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் இந்த படம் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளிவருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும் சமந்தா தான். படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை சமந்தா தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சமந்தா பல விஷங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அப்போது நடிகை சமந்தா கூறியதாவது, ஒரு சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய நட்சத்திரம் அந்தஸ்து கிடைத்ததும் ரசிகர்கள் திரையில் என் பெயரை பார்த்து கத்துவதும் பேரதிர்ச்சியாக ஆரம்பத்தில் இருந்தது. அந்த அதிர்ச்சி தான் என்னை அடுத்தடுத்து ஓட வைத்தது. ஒரு கட்டத்தில் சினிமா எனக்கு ஒரு போதையாகவே மாறிப்போனது.

- Advertisement -

ஒரு ஆண்டில் அடுத்தடுத்து நான் நடித்த 5 படங்களும் ஹிட் ஆனதால் என்னை அதிர்ஷ்டகாரி என்று பாராட்டினர். அதனால் ஏற்பட்ட திமிரால் என் திறமையை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல் வெறும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளோடு மட்டுமே நான் திருப்தி அடைந்தேன். அதனால் எனது திரைப்பயண ஓட்டத்தில் நான் பெருமைப்பட முடியாத பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன்.

உடல் நலக்குறைவால் படுக்கையில் வீழ்ந்தேன். ஆனால் அந்த இடைவெளியில் இருந்து நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு ஆண்டுக்கு 5 முதல் 6 படங்கள் என தொடர்ந்து ஓடிக்கொண்டே தான் இருந்தேன். அப்போது வசூலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். நான் திரைத்துறையில் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த 2வது இடைவெளி (முதல் கணவர் நாகசைதன்யா பிரிவு) வந்தது.

- Advertisement -

நடிகர்களாக இருக்கும் போது நமக்கு ஓய்வே கிடையாது என்கிற ஒரு அகம்பாவம் வந்துவிடுகிறது. ஆனால் இந்த இடைவெளி என் எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றியது. மீண்டும் சினிமாவுக்கு திரும்பினால் பழைய வாழ்க்கை பாணியை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நல்ல கேரக்டர்கள் நல்ல கதைகள் நல்ல படைப்புகளில் என்னை அடையாளப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.

அதன்படியே பிராண்டுகள் திரைப்படத் தேர்வுகள் என எல்லாவற்றையும் மாற்றி தற்போது எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளேன். இப்போது என் வாழ்க்கையை ஒரு தெளிவான நோக்கத்தோடு வாழ்ந்து வருகிறேன் என்று நடிகை சமந்தா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். மேலும் தமிழில் நடிக்க நல்ல கதைகள் கொண்ட படங்களை தேடி வருவதாகவும் சமந்தா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்