- Advertisement -
சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, முந்தைய தலைமுறையினர் மாதவிடாய் மற்றும் உடல்நல பிரச்சனைகளை வெளியே சொல்லாமல் சகித்துக் கொண்டனர். தற்போதைய பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் ஹார்மோன் மாற்றங்கள் கருவுறுதல் மனநலம் தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். மேலும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகளை தேடுவதுடன் அவற்றைப் பற்றி தயக்கம் இன்றி பேசவும் தொடங்கியுள்ளனர் என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார். இது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.





